நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்
25 • 8 • 2021
நிலவைக் காட்டி கதை சொன்ன காலத்தில்
நிஜமாய் தொட்டான் நிலவின்பாதம்
அகிலம் ஒளிர..
ஆராய்ச்சியின் உச்சமாக...
அமெரிக்கா கண்டெடுத்த அற்புத அறிவால்
ரஷ்யாவை மிஞ்சிய ரகசியத்தை
சிரத்தையுடன் தொடர்ந்த அமெரிக்கா
ஆம்ஸ்ட்ராங் எனும் நூல்கொண்டு
கிட்டத்தில் இழுத்தது நிலவினை...
எங்கோ ஒளிர்ந்த நிலா....
என்றேனும் ஒரு நாளில்
மிக அருகே சுற்றுலாத் தலமாகும்
என்ற எண்ணமோ...
அந்த நாளை அலங்கரித்து..
பொன்னோளி வீசிய அந்த அபரிமிதமான நாளை உலகிற்குத் தந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்னும் அறிவியலார்.
அவரைப் பற்றிய சில செய்திகள்...
1930 ம் ஆண்டு ஆகஸ்டு 5- நாள் , அமெரிக்காவில் " வாப்கோநெட்டா " வில் , கோயினிக் ஆம்ஸ்ட்ராங் வயோலா லூயிஸ் ஏங்கலின் இணையரின் மகனாகப் பிறந்தார் ஆம்ஸ்ட்ராங். தமது இரண்டாம் வயதிலேயே " க்ளீவ்லேண்ட்" விமான சாகச பந்தையத்திற்குத் தந்தையுடன் சென்றார். அப்போதே இவரின் பறக்கும் ஆசை சிறகுவிரிக்கத் தொடங்கியது.
ஜுலை 20 - 1936 ம் ஆண்டு வாரன் ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை தொடங்கினார். தந்தையுடன் ' டின் கூஸ் ' என்று அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் பயணம் செய்தார்.
ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின் வாப்கோநெட்டா விமான நிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினைப் பெற்றார். தமது 16 ம் வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங் ஆண்கள் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டதால் " கழுகு சாரணர்" என்ற பட்டம் பெற்றார். அமெரிக்காவின் Boys scout of America அதன் புகழ்பெற்ற" Eagle scout " விருதுதைத் தந்து அணிசெய்தது.
1947 ம் ஆண்டு அவரின் 17 ஆம் வயதில் " பர்டீ" பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியல் படித்தார்.
ஜனவரி 26- 1949 ஆம் ஆண்டு கடற்படையின் மூலம் தமது 18 - ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக பென்சாகோலவுக்குச் சென்றார்.அப்போது " கபோட்" USS Cabot மற்றும் USS Write - ரைட் ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமானத்தை இயக்கும் தகுதிபெற்றர்.
வான் வழிப் பயணங்கள்.
ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ- 8 விண்வெளித் திட்டத்தில் மாதிரி தளபதியாக செயல்பட்டார்.1968 ஆம் ஆண்டு டிசம்பர் - 23 - ம் நாள் அப்பல்லோ- 11 என்ற விண்வெளி ஓடத்தில் செயல்பட பதவி ஏற்றார்.அப்போது அப்பல்லோ சந்திரனின் சுற்றுப் பாதையில் இருந்தது.
செலேடன் திட்டமிட்டபடி குழுத் தளபதியாக ஆம்ஸ்ட்ராங் இருந்த போதிலும் , விமானியாக " பஸ் ஆல்ட்ரின் " மற்றும் செயல்படுத்தும் விமானியாக மைக்கேல் காலின்ஸ்சும் இருந்தனர். பின் " ஜிம் லோவெல்க்" அறிவுறுத்தலின் படி ஆம்ஸ்ட்ராங் , ஆல்ட்ரினுக்கு செயலாற்ற பணிந்தார்.
அப்பல்லோ- 11
அப்பல்லோ- 11( Apollo- 11 )என்பது சந்திரனில் இறங்கிய முதல் ஆட்கள் ஏறிய பயணத்திட்டம் ஆகும். இது அப்பல்லோவின்- 5 வது திட்டம் ஆகும். ஜுலை - 16 - 1969- - ஆம் ஆண்டு 39A ஏவுதளத்திலிந்து அப்பல்லோ - 11 என்ற அமெரிக்காவின் விண்வெளி ஓடம் நிலவைத் தொடும் சோதனையை சாதனையாக்கப் பயணித்தது. நான்கு நாட்கள் பயணத்திற்குப் பின் ஜுலை - 20 ஆம் நாள் சந்திரனில் சங்கமம் ஆனது. ,சந்திரனில் தரையிறங்கியது.
இத்திட்டத்தில் கட்டளை விமானியாக " மைக்கேல் கோலின்சும்," சந்திரக் கூறு விமானியாக " எட்வின் ஆல்ட்ரினும்" பயணித்தனர்.
மைக்கேல் கோலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தங்கிக் கொள்ள , ஆம்ஸ்ட்ராங்கும் , ஆல்ட்ரினும் " ஈகிள்" எனும் சிறிய ரக விண்வெளிஓடத்தில் சந்திரனில் கால் வைத்தனர். ( அதன் பின் 6- மணி நேர தாமதத்திற்குப் பின்) ஜுலை 21 ம் - நாள் நிலவில் சங்கமமாகி சரித்திரம் படைத்த நாள்.இது உலகையே வியப்பில் ஆழ்த்திய நாள். அம்புலியில் இறங்கிய வேங்கைப் புலிகளான இருவரில் ஒருவரான ஆல்ட்ரின் ஐயத்தால் பின் தங்க, ஆர்வம் மேலிட்ட ஆம்ஸ்ட்ராங்கோ தனது பொன் பாதம்தனை தன் மதிநிறைந்த மகிழ்ச்சியில் முழுமதியில் முதன் முதலில் பதித்தார்.
இந்நாள் மனித வரலாற்றில் பொன் நாளாகத் திகழ்கிறது.
மறைவு
செயற்கரிய செயலால் சிறந்த மாமேதை , உடல்நல பாதிப்பால்( இதய மாற்றுப்பாதை ( Bypass) அறுவைச் சிகிச்சை செய்து நலம்பெற்று, மீண்டும் உடல்நலம் குன்றி உலக வாழ்வில் இருந்து விடுதலையானார்.
" அமெரிக்காவின் விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளுமே" என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.
சிறப்பினைத் தந்த சிற்பிகளின் நினைவுகளைப் போற்றி வணங்குவோம்.!
************* ************** ***************
0 Comments