முகரம் நாளின் சிறப்புகள்
இசுலாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாக முகரம் விளங்குகிறது. இது இசுலாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இசுலாமிய நாட்காட்டி
1.முகரம்
2.சஃபர்
3.ரபி உல் அவ்வல்
4.ரபி உல் ஆகிர்
5.ஜமா அத்துல் அவ்வல்
6.ஜமா அத்துல் ஆகிர்
7.ரஜப்
8.ஷஃபான்
9.ரமலான்
10.ஷவ்வால்
11.துல் கஃதா
12.துல் ஹஜ்
ஆசூரா நாள்
முகரம் மாதத்தின் பத்தாவது நாளை ஆசூரா தினம் என்று குறிப்பர். அரபு மொழியில் ஆசூரா என்பது பத்தைக் குறிக்கும். இந்த நாளை ஒரு கூட்டத்தினர் தியாகத் திருநாளாகவும், ஒரு கூட்டத்தினர் நன்றி செலுத்தும் நாளாகவும் உண்ணா நோன்பிருந்து கொண்டாடுகின்றனர்.
ஆசூரா நாளின் நோன்பு
இசூலாமிய சமயத்தின் தூதுவர் மூசா(அலை) அவர்களையும், அவர்களின் தோழர்களையும், நான் தான் கடவுள் என்னை வணங்க வேண்டும் எனக்கூறிய பிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் பிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்து மூசா சமூகத்தை காப்பாற்றிய நாளாகும். அதற்காக நன்றி செலுத்தும் முகமாக நோன்பு நோற்றார்கள்.
இதைக் கடைப்பிடித்து முகமது நபியும் நோன்பு வைத்தார்கள். இது இசூலாத்தில் கட்டாயமில்லை. இதுவொரு சுன்னத்தாக (நபி அவர்களின் வழிமுறை) கொள்ளப்படுகிறது.
ஆசூரா - தியாகத் திருநாள்
கர்பலா போரில் முகமது நபியின் பேரனான ஹீசைன் இப்னு அலி கொல்லப்பட்டதைத் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர் ஒரு கூட்டத்தினர். இந்த நாளில் தன்னைத் தானேஅடித்துக் கொண்டு கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துவர்.
இசூலாம் கொள்கை
நபி அவர்கள் தன்னைத் தானே துன்புறுத்துவதையும், மற்றவர்களைத் துன்புறுத்துவதையும் கண்டிக்கிறார். என் பேரன் இறந்த நாளாக கருதாமல் மூசா சமூகத்தை அல்லா காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் மகிழ்ச்சியான நாளாக ஏற்றுக் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என வலியுறுத்துகிறார்..
நபி வழிமுறையினைப் பின்பற்றுவோம் !
ஆக்கம் :
திரு . பா.நூருல்லாக் , தமிழாசிரியர் ,
அல்அமீன் மேல்நிலைப் பள்ளி ,
மதுரை
0 Comments