9 - அறிவியல் - ஒப்படைப்பு விடைகள் - இயற்பில் - அலகு ! - அளவீடு / 9th SCIENCE - ASSIGNMENT - QUESTION and ANSWER



        ஒப்படைப்பு    -    விடைகள்

           வகுப்பு : 9      பாடம்: அறிவியல்

                      இயற்பியல்

                  அலகு 1 - அளவீடு

                          பகுதி -அ


1. ஒரு மதிப்பெண் வினா

1. ஒளிச்செறிவின் SI அலகு முறை-----

அ) கெல்வின்        ஆ ) கேண்டிலா
இ) ஆம்பியர்            ஈ) மோல்

விடை : ஆ ) கேண்டிலா

2) ஒர் ஒளி ஆண்டு என்பது -------

அ) 94.6 x 10 15 மீ

ஆ) 9.46 x 1015 மி.மீ

 இ) 94.6 x10 -15 மீ 

ஈ ) 9.46 x 1015 மீ

விடை :  ஈ )9.46 × 10 15 மீ.


3) தனிச்சுழி வெப்பநிலை என்பது

அ) 0K           ஆ) 0°C
இ) 0° F         ஈ) 100°C

விடை : அ ) 0 K


4) திருகு அளவியின் மீச்சிற்றளவு


அ) 0.01 மிமீ
ஆ) 0.1 மிமீ
இ) 1.0 மிமீ
ஈ ) 0.01 செமீ

விடை : ஈ ) 0.01 செமீ


5) நகைக் கடைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தராசின் பெயர் என்ன?

அ) பொதுத் தராசு 

ஆ) சுருள்வில் தராசு

இ) எண்ணியல் தராசு

ஈ )இயற்பியல் தராசு

விடை : ஈ ) இயற்பியல் தராசு

6) வெப்பநிலையின் SI அலகு எது?

அ) பாரன்ஹீட்    ஆ) செல்சியஸ்

 இ) கெல்வின்      ஈ) மோல்

விடை : இ ) கெல்வின்

7) சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளவிடப் பயன்படும் SI அலகு எது?


அ) வானியல் அலகு
ஆ) ஒளி ஆண்டு
இ) விண்ணியல் ஆரம்
ஈ) ஜிகாபைட்

விடை : இ ) விண்ணியல் ஆரம்

8) மீட்டர் அளவுகோல் ஒன்றினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு

அ) புரியிடைத் தூரம் ஆ) மீச்சிற்றளவு

 இ) சுழிப்பிழை      ஈ) தடிமன்

விடை : ஆ ) மீச்சிற்றளவு

9) எண் மதிப்பு மற்றும் திசைப்பண்பு கொண்ட அளவு ........ என அழைக்கப்படுகிறது

அ) ஸ்கேலார் அளவு    ஆ) சரியான அளவு 

இ) வேறுபட்ட அளவு ஈ) ஈ) வெக்டர் அளவு

விடை : ஈ ) வெக்டர் அளவு

10) சுருள்வில் தராசு எந்த விதிப்படி இயங்குகிறது?

அ) பாயில் விதி      ஆ) சார்லஸ் விதி 

(இ) ஹூக்ஸ் விதி ஈ) நியூட்டன் விதி

விடை : இ ) ஹூக்ஸ்விதி

                                 பகுதி -ஆ

II. சிறு வினா

1. வானியல் அலகு-வரையறு

             வானியல் அலகு  ( A U) : புவி மையத்திற்கும், சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும் .

ஒரு வானியல் அலகு  (IAU ) = 1.496 x 10 11  மீ


2. மீச்சிற்றளவு -வரையறு

        ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச்சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.

3. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு?

ஒரு மனிதனின் நிறை: 50 கி.கி

எடை ( w ) mg = 50 x 9 8 - 490 நியூட்டன்.

4. அளவீடு என்றால் என்ன?

                   அளவீடு என்பது  ஒரு பொருளின் பண்பையோ அல்லது நிகழ்வையோ மற்றொரு பொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் ஒப்பிட்டு அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு ஒரு எண்மதிப்பை வழங்குவதாகும்.

5. வெப்பநிலையை அளக்கக் கூடிய அலகுகள் யாவை?

        டிகிரி செல்சியல் ( C ) மற்றும் பாரன்ஹீட்  ( F ) ஆகும்.

                    பகுதி - இ


III. பெரு வினா


1. SI அலகுகளை எழுதும் போது பின்பற்ற வேண்டிய விதிகளுள் ஏதேனும் 5-ஐ எழுது.

 * அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளை எழுதும்போது  , முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கக் கூடாது.

எடுத்துக்காட்டு : newton , henry , ampere

* அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டு : newton என்பது N , henry  என்பது H .

* அலகுகளின் குறியீடுகளைப் பன்மையில் எழுதக் கூடாது.

எடுத்துக்காட்டு : 10Kg என்பதை 10 Kgs என எழுதக் கூடாது.

* வெப்பநிலையை கெல்வின் ( kelvin ) அலகால் குறிப்பிடும்போது டிகிரி குறி இடக்கூடாது.

* ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : Ampere என்பதை amp என்றோ second என்பதை sec என்றோ எழுதக்கூடாது.


2. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

   திருகு அளவியைப் பயன்படுத்தி ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனைக் கண்டறிவேன்.

* முதலில் திருகு அளவியின் புரியிடைத்தூரம் , மீச்சிற்றளவு  மற்றும் சுழிப்பிழையைக் கண்டுபிடிப்பேன்.

* திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணத்தை வைப்பேன்.

* பற்சட்ட அமைப்பின் உதவியால் திருகைத் திருகி நாணயத்தை நன்றாகப் பற்றிக் கொள்ளுமாறு செய்வேன்.

* புரிக்கால் காட்டும் அளவையும் ( PSR ) புரிக்கோலின் வரைகோட்டுடன் இணையும் தலைக்கோல் ( HSC ) பிரிவையும் குறித்துக் கொள்வேன்.

நாணயத்தின் தடிமன் = P.S.R + திருத்தப்பட்ட H.S.R.

அதாவது , P.S.R + ( HSC± ZC ) XLC

* நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்துச் சோதனையைத் திரும்பச் செய்வேன்.

* அளவீடுகளை அட்டவணைப்படுத்துவேன்.

* கடைசிக் கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி நாணயத்தின் தடிமனைக் கொடுக்கும் என்பதைக் கண்டறிவேன்.

**************    *************    **********

Post a Comment

3 Comments