ஒப்படைப்பு - 2
வினாத்தாள் & விடைகள்
ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
(பள்ளிக்கல்வித்துறை வழங்கிய
முன்னுரிமைப் பாடத்திட்டத்தின்
அடிப்படையில்(2021-22) )
இயல் - 2
பெரிய புராணம், புறநானூறு
பகுதி - 1
ஒரிரு சொற்களில் விடை தருக.
1.நாயன்மார்களின் வரலாற்றை
விரிவாகக் கூறும் நூல் எது?
விடை : பெரிய புராணம்
2.பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப்
பாடிய கவிவலவ எனச் சேக்கிழாரைப்
புகழ்ந்தவர் யார்?
மகாவித்துவான் மீனாட்சு சுந்தரனார்
3.கருங்குவளை-இலக்கணக்குறிப்பு
தருக.
விடை : பண்புத் தொகை
4.பணிலம் என்பதன் பொருள் யாது?
விடை : சங்கு
5.போந்து என்பது எம்மரத்தின் பெயர்?
விடை : பனை மரம்
6.மல்லல் மூதூர் வயவேந்தே - வண்ணமிட்ட
சொல்லின் பொருள் என்ன?
விடை : வளமை
7.வெட்சி முதலான புறத்திணைகளுக்குப் பொதுவான திணை எது?
விடை : பொதுவியல் திணை
8'உயிரை உருவாக்குபவர்கள் யார்?
விடை : நீர்நிலைகளை உருவாக்குபவர்கள்
9.'வான் உட்கும் வடிநீண் மதில்' எனத்
துவங்கும் புறநானூற்றுப் பாடலின்
ஆசிரியர் யார்?
விடை : குடபுலவியனார்
10.மூதூர் என்பதைப் பிரித்து எழுதுக.
விடை : முதுமை + ஊர்
பகுதி - 2
சுருக்கமான விடை தருக.
11.பெரியபுராணம் - சிறுகுறிப்பு வரைக.
* சுந்தரரின் திருத்தொண்டத்தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
* நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
* இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் ஆகும்.
* இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
12.புறநானூறு - நூல் குறிப்பு வரைக.
* புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.
* இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* பண்டைய மன்னர்களின் வீரம் , வெற்றி , கொடையும் , மக்களின் புற வாழ்க்கை பற்றியும் கூறுகிறது.
* பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
13.உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே - குறிப்பு தருக.
* நீரின்றி அமையாத உடல் உணவால் அமைவது.
* உணவையே முதன்மையாகவும் உடையது.
* உணவு தந்தவர் உயிரைத்தந்தவர் ஆவர்.
* உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
14.நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது ?
* அன்னப் பறவைகள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்வதால் , அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.
* இக்காட்சியானது , நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.
15 ) நிலையான புகழைப்பெற யாது செய்ய வேண்டுமெனப் புறநானூறு கூறுகிறது ?
* நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.
* அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.
பகுதி - 3
விரிவான விடை தருக.
16 ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
காவிரியின் வளம்
காவிரி ஆறானது மலையிலிருந்து தேன் நிறைந்த பூக்களை அடித்துக்கொண்டு நீர்நிலைகள் நிறைந்த சோழ நாட்டை வளப்படுத்தும் வகையில் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.
சங்குகள் இடறின
பயிர் வளர்ந்ததும் களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் இடறின. அதனால் இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.
நீர்நிலைகள்
* காடுகளில் உள்ள கரும்புகளிலும், செடிகளிலும் அரும்புகள் வளர, கரிய குவளை மலர்கள் மலர்ந்தன.
* வயல்களில் சங்குகள் கிடந்ததால் கரையெங்கும் அன்னங்கள் உலவுகின்றன.
* நீர் நாடு என்று சொல்லும் அளவுக்குச் செழிப்பு மிக்கதால் இதுபோன்ற சிறப்பு பிற நாடுகளுக்கு இல்லை என்பர்.
17 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
*************** ************* ************
வினா உருவாக்கம்.
திரு.மணி மீனாட்சி சுந்தரம் அவர்கள் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையப்பட்டி , மதுரை.
***************** ************ ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Good
ReplyDelete