9 - அறிவியல் - ஒப்படைப்பு விடைகள் - உயிரியல் - அலகு 18 - திசுக்களின் அமைப்பு / 9th SCIENCE - ASSIGNMENT - UNIT 18 - BIOLOGY - QUESTION & ANSWER

 


            ஒப்படைப்பு       விடைகள் 

           அறிவியல்   -  உயிரியல்

        அலகு.18. திசுக்களின் அமைப்பு.

                          பகுதி - அ

1.ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1) வயிற்றுப் போக்கின் போது நம் உடலில் இருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறி விடுகின்றது. அதனை நம் உடலின் நாடித் துடிப்பின் மூலம் மருந்துவர் கண்டறிந்து விடுவார். எந்தத்திசு நீர்ச்சத்து குறைவைக் காண்பிக்கும் திசுவாகச் செயல்படுகிறது?

அ) எபிதீலிய திசு

ஆ) இணைப்புத் திசு

இ) தசைத் திசு.

ஈ) நரம்புத் திசு 

விடை : அ ) எபிதீலிய திசு

2) சாம், ஓட்டப்பந்தயத்தில் ஓடும் பொழுது அவன் காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. இதற்கு காரணம்

அ) தசைநார்கள் அதிகமாக இழுக்கப்படுவதால்

 ஆ) தசைநார்கள் இறுக்கம் அடைவதால்,

இ) தசைநார்கள் நெகிழ்ச்சி அடைவதால். 

ஈ) தசைநார்கள் வலிமை அடைவதால்.

விடை :  அ) தசைநார்கள் அதிகமாக இழுக்கப்படுவதால்

3) அமீபா போன்று நகரும் தன்மை உடையது, கொரோனா நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரசை விழுங்கி நம் உடலுக்கு பாதுகாப்பை தரும் திசு.

அ) எரித்ரோசைட்

ஆ) லியூக்கோசைட்

இ) த்ராம்போசைட்

ஈ) நிணநீர்

விடை : ஆ ) லியூக்கோசைட்

4) திசுக்கள் பற்றிய படிப்பிற்கு  -------- என்று பெயர்.

அ) எண்டமாலஜி      ஆ) ஆர்ணித்தாலஜி 

இ) ஹிஸ்டோலஜி    ஈ) ஆங்காலஜி

விடை :  இ ) ஹிஸ்டாலஜி

5) பாரன்கைமா திசுக்கள் மீது ஒளி படும்பொழுது அவை பசுங்கணிகங்களை உற்பத்தி செய்கின்றன. அப்பொழுது அவை ......... . திசு என அழைக்கப்படுகின்றன,

அ) கோலன்கைமா       ஆ) ஏரன்கைமா 

இ) குளோரன்கைமா    ஈ) ஸ்கிளிரன்கைமா

விடை :  இ ) குளோரன்கைமா


                       பகுதி - ஆ

இரு மதிப்பெண் வினா

1. இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை?

 இடையாக்குத் திசு: 

இவை முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதி ஆகும். நிலையான திசுப்பகுதிகளுக்கு இடையே இவை காணப்ப டுகின்றன. இடை ஆக்குத்திசு இலையின் அடிப்பகுதியிலோ (எ.கா: பைனஸ்தாவரம்), கணுவிடைப் பகுதியின்அடியிலோ (எ.கா: புற்கள்) காணப்படுகின்றன.

2. கூட்டுதிசு என்றால் என்ன? 

  கூட்டுத்திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும். 

3. பாரென்கைமா திசு -விளக்கம் தருக. 

பாரன்கைமா 

பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசுக்கள் ஆகும். பாரன்கைமா செல்கள் சம அளவுடைய, மெல்லிய சுவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளியுடன் கூடிய திசுவாகும். நீர்த் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியைக் கொண்டுள்ளதால் அவற்றிற்கு ஏரன்கைமா என்று பெயர். பாரன்கைமா திசுக்கள் மீது ஒளிபடும்பொழுது அவை பசுங்கணிகங்களை உற்பத்தி செய்கின்றன. அப்பொழுது அவை குளோரன்கைமா எனப்ப டும்.

பகுதி - இ

ஐந்து மதிப்பெண் வினா

1.நிலைத்த திசுக்களை விவரிக்க 

      நிலைத்த திசுக்கள்

நிலைத்த திசுக்கள் பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்களாகும். சில நேரத்தில் அவை பகுதி அல்லது முழு ஆக்குத்திசுவாக மாறுகின்றன. 

நிலைத்த திசுக்கள் இருவகைப்படும். 

அவை: 1. எளியதிசு மற்றும் 2. கூட்டுத்திசு. 

1. எளியதிசு 

ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு எளியதிசு ஆகும். உதாரணம்: பாரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்களீரன்கைமா. பாரன்கைமா பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசுக்கள் ஆகும். பாரன்கைமா செல்கள் சம அளவுடைய, மெல்லிய சுவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளியுடன் கூடிய திசுவாகும். நீர்த் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியைக் கொண்டுள்ளதால் அவற்றிற்கு ஏரன்கைமா என்று பெயர். பாரன்கைமா திசுக்கள் மீது ஒளிபடும்பொழுது அவை பசுங்கணிகங்களை உற்பத்தி செய்கின்றன. அப் பொழுது அவை குளோரன்கைமா எனப்ப டும்

 பாரன்கைமா வகைகள் பாரன்கைமா குளோர ன்கைமா ஏரன்கைமா சதைப்பற்றுள்ள மற்றும் வறண்ட நிலத் தாரவங்களில் பாரன்கைமா நீரை சேமிக்கிறது. மேலும், உணவு சேமித்தல், உறிஞ்சுதல், மிதத்தல், சுரத்தல் மற்றும் பல வேலைகளைச் செய்கிறது. 

2 கூட்டுத்திசுக்கள்

 ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும். இவை பாரன்கைமா மற்றும் ஸ்கிளீரன்கைமா செல்களையும் கொண்டுள்ளன. இருந்தபோதிலும் கோலன்கைமா செல்கள் இந்த திசுவில் காணப்ப டுவதில்லை. பொதுவான உதாரணம்: சைலம் மற்றும் ஃபுளோயம்.

விடைத்தயாரிப்பு

 மு. மகேந்திர பாபு , தமிழ் ஆசிரியர், மதுரை .

Post a Comment

1 Comments