9 - அறிவியல் - ஒப்படைப்பு விடைகள் - அலகு 12 - வேதியியல் - தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை / 9th SCIENCE - ASSIGNMENT - UNIT 12 - CHEMISTRY - QUESTION & ANSWER

 

ஒப்படைப்பு       விடைகள் 

          வகுப்பு - 9     அறிவியல் 

                       வேதியியல்

அலகு. 12. தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

                      பகுதி - அ

1.ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1) நவீன தனிம வரிசை அட்டவணையில் 16-வது தொகுதியின் பெயர் -------

(அ) ஆக்ஸிஜன் குடும்பம் அல்லது

சால்கோஜென் குடும்பம்

ஆ) கார்பன் குடும்பம்

இ) நைட்ரஜன் குடும்பம் அல்லது

சால்கோஜென் குடும்பம்

ஈ) போரான் குடும்பம்

விடை : அ ) ஆக்ஸிஜன் குடும்பம் அல்லது

சால்கோஜென் குடும்பம்

2) ஹென்றி மோஸ்லே தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை விளக்க உதவிய பரிசோதனை முறை

அ) X - கதிர் சிதைவு

ஆ) F - கதிர் சிதைவு

இ) Y- கதிர் சிதைவு

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : அ ) X - கதிர் சிதைவு

3) 16வது தொகுதியில் உள்ள தனிமங்கள் எவை?

அ) O,S, Se,Te,Po

இ) N, P, AS, Sb

ஆ) F, CI, Br, I

ஈ) C, Si, Ge, Sn, Pb

விடை : அ ) ) O,S, Se,Te,Po

4) தனிமவரிசை அட்டவணையின் எந்த தொகுதியில் உலோகங்கள் , அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் இடம் பெற்றுள்ளன?

அ) S தொகுதி

ஆ) P தொகுதி 

இ) d தொகுதி

ஈ) f தொகுதி

விடை : ஆ )  P தொகுதி

5) மந்தவாயுக்கள் இடம் பெற்றுள்ள தொகுதி எது?

அ) 17 வது தொகுதி

ஆ ) 18வது தொகுதி 

இ) 16வது தொகுதி

ஈ) 13வது தொகுதி

விடை : ஆ ) 18 வது தொகுதி

6) உலோகங்களின் பண்பு(கள்) எவை?

அ) கடினத்தன்மை கொண்டவை

ஆ) பளபளப்புத் தன்மையுடையவை

இ) கம்பியாக நீட்டக் கூடியவை 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை :  ஈ ) மேற்கண்ட அனைத்தும் 

7) P தொகுதியில் உள்ள அலோகம்

அ) Ca ஆ) N இ) Ni ஈ) அனைத்தும்

விடை : ஆ ) N

8) உலோகப் போலியின் பண்பு

அ) உலோகப் பண்பு இல்லாதவை 

ஆ) அலோகப் பண்பு கொண்டவை 

(இ அலோகம் மற்றும் உலோகப் பண்பு கொண்டவை 

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை :  இ ) உலோகம் மற்றும் அலோகப் பண்பு கொண்டவை 

9) ஒரு அணுவின் ஆர்பிட்டில் உள்ள துணைக் கூடுகள் எவை?

அ) S துணைக் கூடு ஆ) P துணைக் கூடு 

இ ) d துணைக் கூடு  

ஈ)மேற்கண்ட அனைத்தும்

விடை : ஈ ) மேற்கண்ட  அனைத்தும்

10) f துணைக் கூட்டில் நிரப்பக் கூடிய அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

அ) 14      ஆ) 13    இ)12      ஈ)10

விடை : அ ) 14 

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.டாபர்னீரின் மும்மை விதியை வரையறு? 

             டாபர்னீர், மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று கூறினார். இது டாபர்னீரின் மும்மை விதி என அழைக்கப்படுகிறது. 

2.உலோககலவை என்றால் என்ன?

உலோகக் கலவை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவை யாகும்.

3. மந்த வயுக்கள் என்பது என்ன?

ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் 18ஆம் தொகுதியில் உள்ள ரேடான் போன்ற தனிமங்கள் அரிய வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள் என அழை க்கப் படுகின்றன. இவை ஓரணுத் தனிமங்கள். மற்ற பொருட்களுடன் அவ்வளவு எளிதில் வினை புரிவதில்லை. எனவே, இவைமந்த வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இவை மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன. எனவே, இவை அரிய வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன

4. பிரதி நிதித்துவ தனிமங்கள் குறிப்பு வரைக. 

. p-தொ குதி தனிமங்கள்: இவை அட்டவணையில் 13 முதல் 18 தொ குதிகள் வரை உள்ளன. இவற்றில் போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள் (ஹீலியம் தவிர) அடங்கும். இவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

5. உலோகக்கலவையின் பயன்கள் யாவை?

• இவை விரைவில் துருப்பிடிப்பதும், அரித்துப் போவதும் இல்லை . அப்படியே அரித்தாலும் சிறிதளவே சேதமடையும். 

• இவை தூய உலோகத்தை விட கடினமாகவும் வலிமையானதா கவும் இருக்கும். எ.கா: தங்கம் செம்போடு கலக்கப்படும் போது தூய தங்கத்தை விட வலிமையானதாக இருக்கும். 

• இவை தூய உலோகத்தை விட கடத்தும் தன்மை குறைந்தவை. எ.கா: செம்பு அதன் உலோகக் கலவைகளாகிய பித்தளை மற்றும் வெண்கலத்தை விட நன்கு வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். 

• சிலவற்றின் உருகு நிலை தூய உலோகத்தின் உருகு நிலையை விட குறைவு. எ.கா: பற்றாசு என்பது ஈயம் மற்றும் வெள்ளீயத்தின் கலவை. இதன் உருகு நிலை குறைவு.

 

1.உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக 

உலோகங்கள் 

1 ) இயல்பான வெப்ப நிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன.

2 ) பொதுவாக உருகு நிலை அதிகம்

3 ) பொதுவாக கொதிநிலை அதிகம்

4 ) பொதுவாக அடர்த்தி அதிகம்

5 ) அனைத்து உலோகங்களும் பளபளப்பு உடையவை 

6 ) பொதுவாக உலோகங்கள் வெப்பத்தையும் . மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை.

7 ) அடிக்கும்போது தகடாகமாறும்.

8 ) இழுக்கப்படும்போது கம்பியாக நீளும்.

9 ) தட்டும் போது ஒலிஎழுப்பும்

10 ) பொதுவாகக் கடினத்தன்மை வாய்ந்தவை.

அலோகங்கள்


 1 ) இயல்பான வெப்ப நிலையில் திண்ம , திர , வாயு  நிலைகளில் யில் காணப்படுகின்றன.

2 ) பொதுவாக உருகு நிலை குறைவு 

3 ) பொதுவாக கொதிநிலை குறைவு

4 ) பொதுவாக அடர்த்தி குறைவு

5 ) அனைத்து அலோகங்களும் பளபளப்பு அற்றவை 

6 ) பொதுவாக உலோகங்கள் வெப்பத்தையும் . மின்சாரத்தையும் அரிதாகக்  கடத்தக்கூடியவை.

7 ) பொதுவாக மென்மையானது , அல்லது உடையக்கூடியது.

8 ) பொதுவாக மென்மையானது , அல்லது உடையக்கூடியது

9 ) தட்டும் போது ஒலிஎழுப்பாது

10 ) பொதுவாகக் கடினத்தன்மை அற்றவை.


2. குறிப்பு வரைக. அ. p-தொகுதி தனிமங்கள் ஆ. d- தொகுதி தனிமங்கள்
இ. f .தொகுதி தனிமங்கள்


p - தொகுதி தனிமங்கள்: 

இவை அட்டவணையில் 13 முதல் 18 தொ குதிகள் வரை உள்ளன. இவற்றில் போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள் (ஹீலியம் தவிர) அடங்கும். இவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. p தொகுதி பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும். இந்த ஒரு தொகுதியில் மட்டுமேஉலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் என்ற மூன்று வகைப்பாடும் காணப்படுகின்றன.


d-தொகுதி தனிமங்கள்: 

இவை 3 முதல் 12 தொகுதி வரைஉள்ளதனிமங்களைஉள்ளடக்கியது. இவை தனிம அட்டவணையின் மையத்தில் காணப் படுகின்றன. இவற்றின் பண்புகள் s தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களுக்கு இடையில் காணப்படும். எனவே, இவை இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப் படுகின்றன.

f-தொகுதி தனிமங்கள்: 

இவை லாந்தனத்தை அடுத்துள்ள லாந்தனைடுகள் எனப்படும் 14 தனிமங்களையும் ஆக்டினத்தை அடுத்துள்ள ஆக்டினைடுகள் எனப்படும் 14 தனிமங்களையும் உள்ளடக்கியதாகும். இவை தனிம வரிசை அட்டவணையில் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை உள் இடைநிலைத் தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன


விடைத்தயாரிப்பு

 மு. மகேந்திர பாபு , தமிழ் ஆசிரியர் , மதுரை .









Post a Comment

0 Comments