9 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு - புவியியல் - அலகு 1 - விடைகள் / 9th SOCIAL SCIENCE - ASSIGNMENT - QUESTION & ANSWER

 


        ஒப்படைப்பு      விடைகள்

வகுப்பு  - 9         சமூகஅறிவியல்

                   புவியியல்

                   அலகு- 1 

நிலக்கோளம்- புவி அகச்செயல்பாடுகள்

                  பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்வு செய்க:

1. புவி தன்னுள் ------------   கோளங்களை உள்ளடக்கியுள்ளது.

அ) 3     ஆ ) 4    இ )  5        ஈ) 2

விடை : ஆ ) 4

2. புவிக்கோளங்களில் காற்றால் சூழப்பட்ட பகுதி --------

அ) நிலக்கோளம்       ஆ) நீர்ககோளம்

 இ) வளிக்கோளம்   ஈ) உயிர்க்கோளம்

விடை :  இ ) வளிக்கோளம்

3. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி....

அ) கவசம்                ஆ) கருவம் 

இ) மேலோடு         ஈ) கண்டத்திட்டு

விடை :  அ ) கவசம்

4. புவி அதிர்வு உருவாகும் புள்ளி ------  என்று அழைக்கப்படுகிறது.

அ) மேல்மையம்    ஆ) கீழ்மையம் 

இ) புவி அதிர்வு அலைகள் 

ஈ) புவி அதிர்வின் தீவிரம்

விடை : ஆ ) கீழ்மையம்

5. முதன்மைப் பாறைகள் --------  என்றும் அழைக்கப்படுகின்றன

அ) படிவுப்பாறைகள்      ஆ) தீப்பாறைகள்

 இ) உருமாறிய பாறைகள் ஈ) தாய்ப்பாறைகள்

விடை : ஆ ) தீப்பாறைகள்

                              பகுதி-ஆ

1. குறு வினா:

1. புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக?

* புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் ஆகும்.

* புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.

* புவியின் மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் துருவப்பணி பாலங்களால் ஆன நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.

* உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.

2. புவியின் உள் அடுக்குகள் யாவை?

* புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப்

பிரிக்கப்பட்டுள்ளது.


3. ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?

* ஆழிப்பேரலைகள் (சுனாமி) என்பது துறைமுக அலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல் ஆகும்.

* கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு மற்றும் கடலோரப்பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் இப்பெரிய அலைகள்
உருவாகின்றன

4. பாறைகளின் வகைகள் யாவை?

* 1. தீப்பாறைகள்

 2. படிவுப் பாறைகள் 

3. உருமாறிய பாறைகள்

5. புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

* புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.

* புவித்தட்டுகளின் நகர்வு புவி அதிர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.

                                  பகுதி- இ

II. பெரு வினா

1. புவி அமைப்பை விவரி?

புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.

புவி மேலோடு (Crust)

* நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவிமேலோடு என்கிறோம்.

* புவியின் தோல் போன்று புவிமேலோடு உள்ளது.

* இது 5 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

* புவிமேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம்(AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.

கவசம் (Mantle)

* புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் (Mantle) எனப்படும்.

* இதன் தடிமன் சுமார் 2900 கிலோமீட்டர் ஆகும்.

* கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.

கருவம் (Core)

* புவியின் கவசத்திற்குக்கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம்
எனப்படுகிறது.

* இது மிகவும் வெப்பமானது. கருவத்தில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe)
அதிகமாகக்காணப்படுவதால், இவ்வடுக்கு நைஃப்(NIFE) என அழைக்கப்படுகிறது.


2. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

நன்மைகள்

* எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது. அதனால் வேளாண்தொழில் மேம்படுகிறது.

* எரிமலைகள் உள்ளபகுதிகள் புவி வெப்பசக்தியை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

* உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களாக உள்ளன.

* எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத்தொழிலுக்குப் பயன்படுகிறது.

தீமைகள்

* எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர்வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை
சரிதல் போன்றவை நிகழ்கின்றன.

* வெகுதூரம் பயணிக்கும் பாறைக் குழம்பானது தன் பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.

* அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.

* எரிமலைவெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை
ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.


***************    *************   *************

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

**************     ***************  ***********

Post a Comment

1 Comments