8 - சமூக அறிவியல் - குடிமையியல் - ஒப்படைப்பு - விடைகள் / 8th SOCIAL SCIENCE - ASSIGNMENT - QUESTION & ANSWER

 

            ஒப்படைப்பு  - விடைகள் 

                     வகுப்பு: 8

           பாடம்: சமூக அறிவியல்

         குடிமையியல் , அலகு - 1

                       பகுதி-அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1, தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை க

அ) 500    ஆ) 545     இ) 234     ஈ ) 118

விடை : இ ) 234

2. மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்

அ) மாநில முதல்வர் 

ஆ) கல்வி அமைச்சர்

இ) மாநில ஆளுநர்

 ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ ) மாநில ஆளுநர்

3. மாநில அரசின் சட்டங்கள் யாரால் இயற்றப்படுகின்றன

அ) மாநில ஆளுநர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ ) முதலமைச்சர் 

ஈ ) சட்டமன்ற உறுப்பினர்கள்

விடை : ஈ ) சட்டமன்ற உறுப்பினர்கள்

4. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்

அ) 5 ஆண்டுகள்     ஆ ) 6 ஆண்டுகள் 

இ) 2 ஆண்டுகள்     ஈ) 4 ஆண்டுகள்

விடை : ஆ ) 6 ஆண்டுகள்

5. மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்

அ) ஆளுநர்         ஆ) முதலமைச்சர் 

இ) அமைச்சர்   ஈ) குடியரசுத்தலைவர்

விடை : ஆ ) முதலமைச்சர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பதவியேற்ற முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.

2. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

3. சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரக் கூட்டத்தைப் பிறப்பிக்கிறார்.

4, மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது.

5. அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

                                 பகுதி- ஆ

1. குறு வினா:

1. சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

* சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும்.

* இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்.

* உறுப்பினர்களின்பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவில் தற்போது ஆறு மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது.

2. ஆளுநரின் நிலைப்பாடுகள் பற்றி நீவிர் அறிவன யாவை?

* இந்தியக் குடியரசுத் தலைவரால ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.

* இவர் மாநில நிர்வாகத்தின தலைவராக இருக்கிறார்.

* அவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

* மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால்
மேற்கொள்ளப்படுகின்றன.

3. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தகுதிகள் யாவை?

* இந்தியக் குடிமகனாக இருத்தல்வேண்டும்.

* ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. சட்ட மன்ற மேலவை நடைமுறையில் உள்ள மாநிலங்கள் யாவை?

* பிகார்

* உத்திரப்பிரதேசம்

*மகாராஷ்டிரம்

* கர்நாடகம்

*ஆந்திரப் பிரதேசம் 

*தெலுங்கானா

5. சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில
அரசாங்கத்தால் பணியமர்த்தப்படுபவர்கள் யார்?

* மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்
அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்
மருத்துவர்கள்.

                              பகுதி - இ

III. பெரு வினா:

1. சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் பற்றி விரிவாக எழுது.

* சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல்கட்சிகள் போட்டியிடுகின்றன.

* இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.

* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

* சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

* ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

* எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

* ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு சின்னத்தை கொண்டிருக்கும்.

+ சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற
தேர்தலில் வாக்களிக்கலாம்.

IV.செயல்பாடு

1. தமிழக சட்டமன்றம் எத்தனை அவைகளைக் கொண்டுள்ளது? 

                               ஓரவை

11. தமிழக சட்டமன்றம் அமைந்துள்ள இடம் -

                               சென்னை

III. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
                                      234

iv. சட்டமன்றத்தின் அவைத்தலைவர்.

                            சபாநாயகர்

************    *************    *************

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,

இளமனூர் , மதுரை.

******************    **************    **********

Post a Comment

0 Comments