8 - அறிவியல் - ஒப்படைப்பு - அலகு 16 - வினாக்களுக்கான விடைகள் / 8th SCIENCE - ASSIGNMENT - UNIT 16 - QUESTION & ANSWER.

 

                          ஒப்படைப்பு

          வகுப்பு: 8    பாடம்: அறிவியல்

                  அலகு-16  - பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1.கீழ்க்கண்டவற்றுள் மிகசிறிய உயிரினம் எது?

அ) ஆல்கா                ஆ) வைரஸ் 

இ) பாக்டீரியா           ஈ) பூஞ்சை

விடை : ஆ ) வைரஸ் 

2.பாக்டீரியாவைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவிற்கு என்ன பெயர்?

அ) வைராலஜி

இ) கார்டியாலஜி

ஆ) பாக்டீரியாலஜி

ஈ) ஆர்னித்தாலஜி

விடை : ஆ ) பாக்டீரியாலஜி

3. கீழ்வருவனவற்றுள் செல்சுவரை சுற்றிகசை இழை காணப்படும் உயிரினம் எது?

அ) ரோடோஸ்பைரில்லம்

ஆ ) எ .கோலை

இ) சூடோமோனாஸ்

ஈ)விப்ரியோகாலரே

விடை : ஆ ) எ.கோலை

4. ஈஸ்ட்டில் நொதித்தல் எதன் மூலம் நடைபெறுகிறது?

அ) சைமேஸ்           ஆ) அமைலேஸ்

இ) லேக்டேஸ்            ஈ) பெப்சின்

விடை : அ ) சைமேஸ் 

5.கீழ்க்கண்டவற்றுள் பச்சையத்தின் மூலம் உணவு தயாரிக்கும் உயிரி எது?

அ) பிரியான்             ஆ) அமீபா 

இ) பாரமீசியம்           ஈ) யூக்ளீனா

விடை  :  ஈ ) யூக்ளினா

6.ஆல்கா வகையை சார்ந்த உயிரி எது?

ஆ) ரைசோபியம்

அ) நைட்ரோபாக்டர்

இ) கிளாமிடோமோனாஸ்

ஈ) பென்சிலியம்

விடை : இ ) கிளாமிடோமோனாஸ்

7.லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ் காணப்படும் மனித உறுப்பு எது?

அ) கல்லீரல்

ஆ)வயிறு

இ) குடல்

ஈ) மண்ணீரல்

விடை : இ ) குடல்

8.பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் எந்த உயிரினத்தைத் தாக்கும்?

அ) தாவரங்கள்

ஆ) மனிதன்

இ ) கால்நடைகள்

 ஈ) எதுவும் இல்லை

விடை : இ ) கால்நடைகள்


9.சிட்ரஸ் கேன்கர் நோயை உண்டாகும் நுண்ணுயிரி எது?

அ) ஆப்தோவைரஸ்

ஆ) சாந்தோமோனாஸ்

இ) மைக்கோபாக்டீரியம் 

ஈ) பைட்டோபைத்தோரா

விடை :  ஆ ) சாந்தோமோனாஸ்

10.நுண்ணுயிரிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி எது?

(அ) மைக்ரோஸ்கோப்

ஆ) பெரிஸ்கோப்

ஈ) பைனாகுலர்

இ)கலைடாஸ்கோப்

விடை :  அ ) மைக்ரோஸ்கோப்


                                  பகுதி - ஆ

II. குறு வினா.

1.வைரஸ்களின் உயிரற்ற பண்புகளை எழுதுக.

* தன்னிச்சையான சூழலில் இவை செயலற்ற நிலையில் காணப்படுகின்றன .

* இவற்றைப் படிக்கமாக்கி பிற உயிரற்ற பொருள்களை போல நீண்ட நாட்கள்  வைத்திருக்க முடியும்.

2.ஈஸ்ட்டின் செல் அமைப்பு குறித்து எழுதுக.

* ஈஸ்ட்கள் வளிமண்டலத்தில் தன்னிச்சையாகக்  காணப்படுகின்றன . ஈஸ்ட்கள் சர்க்கரை உள்ள அனைத்து ஊடகங்களிலும் வளர்கின்றன.

* இவற்றின் செல்கள் முட்டை வடிவம் உடையவை ,அவை செல்சுவர் மற்றும் உட்கருவைப் பெற்றுள்ளன . இவற்றின் சைட்டோபிளாசம் துகள் போன்றது. அதனுள் வாக்குவோல்கள் , செல் நுண்ணுறுப்புகள் , கிளைக்கோஜன் எனப்படும் எண்ணெய்த்துளிகள் ஆகியவை காணப்படுகின்றன.

*  சைமோஸ்  எனும்  நொதியின் உதவியினால்  ஈஸ்ட்கள் நொதித்தலில் ஈடுபடுகின்றன. இவை காற்றில்லா சூழலில் சுவாசிக்கின்றன . மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.

3.ஆல்காக்கள் நீர்ப் புற்கள் என அழைக்கப்படக் காரணம் யாது?

* ஆல்காக்கள் எளிய , தாவர உடலமைப்பைப் பெற்ற யூகேரியோட்டிக் உயிரினங்கள் ஆகும் .ஆல்காக்கள் ஈரப்பதமான வாழிடங்களில் காணப்படுகின்றன.

*  அதிக அளவில் பசுங்கணிகத்தைப்  பெற்றுள்ள இவை ஏரிகள் மற்றும் குளங்களின் மேற்பரப்பில் மெல்லிய படலமாகக் காணப்படுகின்றன .

* எனவே இவை நீர்ப்புற்கள் என அழைக்கப்படுகின்றன.

4.புரோட்டோசோவாக்களின் வகைகள் யாவை?


* சிலியேட்டா :  சிலியாக்களால் இடம் பெயர்கின்றன .

எ.கா - பாரமீசியம் 

* பிளாஜெல்லேட்டா - கசையிழைகளால் இடம் பெயர்கின்றன .

எ.கா  - யூக்ளினா

* சூடோபோடியா - போலிக் கால்களால் பெயர்கின்றன.
 எ.கா  - அமீபா

ஸ்போரோசோவா - ஒட்டுண்ணிகள் எ.கா - பிளாஸ்மோடியம்.

5.பிரியாங்கள் என்பவை யாவை?


               * பிரியான் என்ற சொல் புரதத்தால் ஆன தொற்றுத் துகள் என்ற வார்த்தையிலிருந்து தரப்பட்டது பிரியான்கள் டி. என். ஏ மற்றும் ஆர். என் .ஏ .வைக் கொண்டிருப்பதில்லை எனவே இவை நோய்த்தொற்று ஏற்படுத்துவதில்லை.

* பிரியான்கள் என்பவை பொதுவாகத்  திடீர் மாற்றமடைந்த தீங்கு தராத புரதங்கள் ஆகும்.  மூளையின் அமைப்பு அல்லது  நரம்புத் திசுக்களைப் பாதிப்பதன் மூலம் இவை நோய்களை ஏற்படுத்துகின்றன.

* எ.கா - குயிட்ஸ் பெல்ட் , ஜேக்கப் நோய் மற்றும் எடுத்துக்காட்டு குரு ஆகும்.  இது ஊன் உண்ணிகளுடன் தொடர்புடையது.


                                   பகுதி - இ

III. பெரு வினா.

1.உணவு பதப்படுத்துதலில் பயன் படுத்தப்படும் பாரம்பரிய முறைகள் குறித்து எழுதுக.


1 ) நொதித்தல் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை நுண்ணுயிரிகளின் உதவியினால் ஆல்கஹால் ஆக மாற்றுவது நொதித்தல் எனப்படும் இது உணவை மேலும் சத்து மிக்கதாகவும் சுவை உடையதாகவும் மாற்றுகிறது

2 ) ஊறவைத்தல் :

நுண்ணுயிர்க் கொல்லிகள் உள்ள திரவத்தில் உணவைப் பராமரிக்கும் உரை ஊறவைத்தல் எனப்படும் இது இரண்டு வகைப்படும்.

வேதியியல் முறை - நொதித்தல் முறை 

வேதியியல் முறையில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திரவத்தில் வைத்து உணவுப் பொருள்கள் பராமரிக்கப்படுகின்றன .

எ.கா : வினிகர் ,  ஆல்கஹால் , தாவர எண்ணெய் .

* நொதித்தல்  முறையில் ஒரு குறிப்பிட்ட வகை திரவத்தில் உள்ள பாக்டீரியங்கள் உணவைப் பாதுகாக்கும்  கரிம அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. அந்த அமிலங்கள் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா மூலம் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.

3 )  கொதிக்க வைத்தல் 

      திரவ நிலையிலுள்ள  உணவுப் பொருள்களைப் கொதிக்க அதன் மூலம் அவற்றிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப் படுகின்றன . 

எ.கா :  பால்,  நீர்

4 ) இனிப்பிடுதல் : 

ஆப்பிள் ,  பேரிக்காய் , பீச் , பிளம் போன்ற பழங்கள் சர்க்கரையைப் பயன்படுத்தித்  தயாரிக்கப்படும் கெட்டியான  திரவத்தில் பதப்படுத்தப் படுகின்றன . அல்லது படிக நிலையிலுள்ள சர்க்கரையை பழங்களுடன் சேர்ப்பதன் மூலம் அவை உலர்ந்த நிலையில் பாதுகாக்கப்படுகின்றன.



                                       பகுதி - ஈ

IV.செயல்பாடு 

**************      **************     ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********



Post a Comment

0 Comments