ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு: 8
பாடம்: சமூக அறிவியல்
புவியியல் - அலகு 1
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
1. வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண்.
ஆ) பாலைமண் ஆ) செம்மண்
இ) கரிசல் மண் ஈ) சரளை மண்
விடை : அ ) பாலைமண்
2. நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ - வருடங்கள் ஆகும்.
அ) 200 ஆ) 2000 இ ) 3000 ஈ) 400
விடை : இ ) 3000
3. கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு
அ) இலை மக்கு அடுக்கு
ஆ) மேல்மட்ட அடுக்கு
இ) உயர்மட்ட அடுக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ ) மேல்மட்ட அடுக்கு
4. உலகின் மிகப்பழமையான படிவுப் பாறைகள் ------- ல் கண்டுபிடிக்கப்பட்டன.
அ) இந்தியா ஆ) அயர்லாந்து
இ) கிரீன்லாந்து ஈ ) பின்லாந்து
விடை : இ ) கிரீன்லாந்து
5. புவியில் தோன்றிய முதன்மையான பாறைகள்
அ) தீப்பாறைகள் ஆ) படிவுப்பாறைகள்
இ) உருமாறிய பாறைகள் ஈ) செம்மண்
விடை : அ ) தீப்பாறைகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. 'இக்னியஸ்" என்றால் "தீ" என்று பொருள்படும்.
2. ' செடிமெண்டரி' என்பதன் பொருள் படியவைத்தல்.
3. எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக்குழம்பு மாக்மா
4. இயக்க உருமாற்றத்தினால் கிரானைட் பாறை நைஸ் பாறையாக உருமாறுகிறது.
5. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 நாள் உலகமண் நாளாக கொண்டாடப்படுகிறது
பகுதி - ஆ
II ) குறுவினா.
1. மண்ணின் குறுக்கமைப்பு என்றால் என்ன?
* மண்ணின் குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய்ப்பாறை வரை உள்ள
மண்அடுக்குகளின் செங்குத்து குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.
2. மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.
* மண்என்பது ஒரு முக்கியமான இயற்கைவளங்களில் ஒன்று.
* மண்புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
3. "பாறையியல்" சிறு குறிப்பு வரைக.
* பாறையியல் என்பது 'புவி மண்ணியலின்' ஒரு பிரிவு ஆகும்.
* இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது.
4. மண் என்றால் என்ன?
* புவியின் மேலடுக்கில் காணப்படும் துகள்கள் மண் எனப்படும்.
5. படிவுப்பாறைகளின் பண்புகள் யாவை?
* இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது.
* இப்பாறைகள் படிகங்களற்ற பாறைகளாகஉள்ளது.
* இப்பாறைகளில் உயிரின படிமங்கள் (Fossill) உள்ளன.
* இப்பாறைகள் மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு உட்படுகின்றன.
பகுதி - இ
III. பெருவினா:
1. பாறைகளின் பயன்கள் யாவை?
1, சிமெண்ட்தயாரித்தல்
2. சுண்ண எழுதுகோல்
3. தீ (நெருப்பு)
4.கட்டடப் பொருள்கள்
5. குளியல்தொட்டி
6. நடைபாதையில் பதிக்கப்படும் கல்
7. அணிகலன்கள்
8. கூரைப் பொருள்கள்
9. அலங்காரப் பொருள்கள்
10, தங்கம் வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள்.
IV. செயல்பாடு
1. நெல் விளையும் இடங்களை எந்தவகையான மண்ணில் காணலாம்?
(அ) வறண்டமண் - உவர்மண்
(ஆ) வண்டல் மண் - செம்மண்
(இ) மலைமண் - கரிசல் மண்
(ஈ) கரிசல் மண் - சரளைமண்
விடை : ஆ ) வண்டல்மண் - செம்மண்
************** ************ ************
விடைத்தயாரிப்பு :
திருமதி.ச.இராணி அவர்கள் ,
ப.ஆசிரியை , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
************** *************** ************-
0 Comments