ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு: 8 பாடம்: அறிவியல்
அலகு - 1 அளவீட்டியல்
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
1. CGS முறையில் நிறையின் அலகு
அ) கிலோ கிராம் ஆ) மில்லி கிராம்
இ ) கிராம் ஈ ) டன்
விடை : இ ) கிராம்
2. பின்வருவனவற்றுள் எது வெப்பநிலையின் அலகு அல்ல?
அ) கெல்வின் ஆ) செல்சியஸ்
இ) பாரன்ஹீட் ஈ) மோல்
விடை : ஈ ) மோல்
3.ஒளிச்செறிவின் அளவை அளக்க பயன்படும் கருவி எது?
அ) ஒளிமானி ஆ) வெப்பமானி
இ) பாரமானி ஈ) அளவுகோல்
விடை : அ ) ஒளிமானி
4.திண்மக்கோணத்தின் SI அலகு ------
அ) ஸ்ட்ரேடியன் ஆ) ரேடியன்
இ) மீட்டர் ஈ) கெல்வின்
விடை : அ ) ஸ்ட்ரேடியன்
5.ஒரு மணிக்கு எத்தனை வினாடிகள்?
அ) 3300 ஆ) 2300 இ) 3600 ஈ) 4000
விடை : இ ) 3600
6.குவாட்ஸ் கடிகாரங்களின் துல்லியத்தன்மை........... வினாடிக்கு ஒரு வினாடி
அ) 10^9 ஆ) 10^8 இ) 10^7 ஈ) 10^10
விடை : அ ) 10^9
7.ஜிபிஎஸ் - இல் பயன்படும் கடிகாரம்
அ) குவார்ட்ஸ்
ஆ) அணுக்கடிகாரம்
இ) ஒப்புமைவகை
ஈ) எண்ணிலக்கவகை
விடை : ஆ ) அணுக்கடிகாரம்
8. 10.29 என்ற எண்ணினை ஒரு தசம இலக்க முழுமையாக்குக.
அ) 10.2 ஆ ) 10.3 இ) 10.29 ஈ ) 11
விடை : ஆ ) 10.3
9.ஒளிச்செறிவின் அலகு ...............
அ) மோல் ஆ) கேண்டிலா
இ) ஆம்பியர் ஈ) கெல்வின்
விடை : ஆ ) கேண்டிலா
10.தளக்கோணத்தின் அலகு யாது?
அ) ஸ்ட்ரேடியன் ஆ) ரேடியன்
இ) மீட்டர் ஈ) கெல்வின்
விடை : ஆ ) ரேடியன்
பகுதி - ஆ
II. குறு வினா.
1.வெப்பநிலை வரையறு.
ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலே ' வெப்பநிலை ' என்று வரையறுக்கப்படுகிறது.
வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.
2.ஒளிப்பாயம் என்றால் என்ன?
* ஒளி உணரப்பட்ட திறன் ஒளிப்பாயம்
* SI அலகு லுமென்
3.திண்மக்கோணம் பற்றி நீ அறிவது யாது?
* மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும் போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும்.
* ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்றும் வரையறுக்கப்படுகிறது.
* SI அலகு ஸ்ட்ரேடியன் ஆகும்
4.அளவீட்டை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையானக் காரணிகள் யாவை?
* கருவி
* திட்ட அளவு
* ஏற்றுக்கொள்ளப்பட்ட அலகு
5.குவார்ட்ஸ் கடிகாரம் மற்றும் அணுக்கடிகாரம் வேறுபடுத்துக.
குவார்ட்ஸ் கடிகாரங்கள்
* குவார்ட்ஸ் எனப்படும் படிகத்தினால் கட்டுப் படுத்தப்படும் மி்ன்னணு அலைவுகள் மூலம் இயங்குகன்றன.
* துல்லியத்தன்மையானது 10 - 9 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.
அணுக்கடிகாரங்கள்
* அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.
* துல்லியத்தன்மை 10 - 13 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.
பகுதி - இ
III. பெரு வினா.
1.தோராயமாக்கல் முறை என்றால் என்ன? முழுமையாக்களுக்கான விதிகளை எழுதுக.
* தோராய முறை என்பது , ஒரு இயற்பியல் அளவை அளவிடும்போது , உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பைக் கண்டறியும் ஒரு வழிமுறையாகும்.
* இது அளவிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை முழுமைப்படுத்துவதன் மூலம் , அதனை உண்மை மதிப்பிற்கு அருகாமையிலுள்ள எண்ணாக மாற்றி மதிப்பிடும் முறையாகும்.
முழுமையாக்கலுக்கான விதிகள் :
* முழுமையாக்கப்பட வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தைக் கண்டறிய வேண்டும்.
* அடுத்த இலக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 ஐ விடக் குறைவாக இருப்பின் , முழுமையாக்கப்பட வேண்டிய இலக்கத்திலுள்ள எண்ணை மாற்ற வேண்டியதில்லை.
* அடுத்த இலக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 அல்லது 5 ஐ விட அதிகமாக இருப்பின் , முழுமையாக்கப்பட வேண்டிய இலக்கத்தின் மதிப்பை ஒன்று அதிகரிக்க வேண்டும்.
பகுதி - ஈ
IV.செயல்பாடு : மாணவர் சுயமாகச் செய்க.
************** *************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
1 Comments
9th science eppo post pls post tody
ReplyDelete