7 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு - குடிமையியல் - அலகு 1 / 7th SOCIAL SCIENCE - ASSIGNMENT - QUESTION & ANSWER

 


            ஒப்படைப்பு  -  விடைகள்

                            வகுப்பு : 7

                பாடம் : சமூக அறிவியல்  

          குடிமையியல்         அலகு - 1

                           பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1.பின்வருவனவற்றுள் எது சமத்துவத்திற்க்கு பொருத்தமான கூற்று?

அ. பிறப்பு,சாதி,மதம்,இனம்,நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை

ஆ. பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் வேறுபாடு

இ. ஆண், பெண் வேறுபாடு

ஈ. இவை அனைத்தும்

விடை : அ ) பிறப்பு,சாதி,மதம்,இனம்,நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை

2. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தைவாதுரைத்த பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் யார்?

அ. லாஸ்கி

ஆ . ஏ.வி.டைசி

இ. பேகம்ருகேயாசகாவத்

ஈ. ஷிண்டே

விடை :  ஆ ) ஏ.வி.டைசி

3. கீழ்கண்டவைகளில் எது அரசியல் உரிமை?

அ.வாக்களிக்கும் உரிமை 

ஆ. அரசை விமர்சனம் செய்யும் உரிமை

இ. இவை இரண்டும்

ஈ. இவற்றில் எதுவுமில்லை

விடை :  இ ) இவை இரண்டும்

4. நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத்தேர்தலில் ஒன்றே என்பது எவ்வகை சமத்துவம்

அ.பாலின சமத்துவம்

ஆ. சமூக சமத்துவம்

இ) அரசியல் சமத்துவம்

ஈ. குடிமை சமத்துவம்

விடை :  இ ) அரசியல் சமத்துவம்

5. மனித இனங்களில் ஆண் பெண் இருவரும் சமம் என்பது

அ. அரசியல் சமத்துவம்

ஆ) பாலின சமத்துவம்

இ. குடிமை சமத்துவம்

ஈ. இவை அனைத்தும்

விடை :  ஆ ) பாலின சமத்துவம்

6. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது  ---------  உரிமை ஆகும்.

அ அரசியல் உரிமை

ஆ. சமய உரிமை

இ. கல்வி உரிமை

ஈ. பாலின உரிமை

விடை :  அ ) அரசியல் உரிமை 

7. இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு

அ.1942
ஆ . 1952
இ. 1957
ஈ. 1947

விடை :  ஆ ) 1952

8. பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு பாடுபட்டவர்கள்

அ. ராஜாராம் மோகன்ராய் 
ஆ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
இ. தயானந்தசரஸ்வதி
ஈ. இவர்கள் அனைவரும்

விடை :  ஈ ) இவர்கள் அனைவரும்.

9.மக்களாட்சியின் இருதூண்கள்

அ சமத்துவம் மற்றும் நீதி
ஆ. பணம் மற்றும் வேலை
இ. அன்பு மற்றும் கருணை 
ஈ. இவற்றில் எதுவுமில்லை

விடை :  அ ) சமத்துவம் மற்றும் நீதி 

10. சட்டத்தின் முன் அனைவரும் என உத்தரவாதம் அளிக்கும் சட்டப்பிரிவு

அ. சட்டப்பிரிவு 17
ஆ. சட்டப்பிரிவு 18
சட்டப்பிரிவு 14
ஈ. சட்டப்பிரிவு 15

விடை : இ ) சட்டப்பிரிவு 14

                       பகுதி -ஆ

II. குறுவினா:

11.சமத்துவம் என்றால் என்ன?

                ஒரு தனி மனிதன்  அல்லது குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல்  அல்லது இனம் , பாலினம் , சமயம் , வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் சமத்துவம் ஆகும்.


12.சமத்துவத்தின் வகைகள் யாவை?

     * சமூக சமத்துவம் 

     * குடிமை சமத்துவம்

     * அரசியல் சமத்துவம்

     *  பாலின சமத்துவம்



13.அரசியல் உரிமைகள் இரண்டினை எழுது?

           * வாக்களிக்கும்  உரிமை 

           * அரசை விமர்சனம் செய்யும் உரிமை


14 குடிமை சமத்துவம் என்றால் என்ன?

            அனைத்துக் குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். அதாவது ய உயர்ந்தோர் - தாழ்ந்தோர் , ஏழை - பணக்காரர் , சாதி - சமயம் என்ற பாகுபாடு இருத்தல் கூடாது.


15. பாலின சமத்துவம் பற்றி யுனிசெஃப் என்ன கூறுகிறது?

             பெண்கள் , ஆண்கள் , சிறுவர் , சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் , வாய்ப்புகள் பெற வேண்டும் என  யுனிசெப் கூறுகிறது.



                                பகுதி - இ


III. பெருவினா

16. சமத்துவத்தை நாம் எந்தெந்த வழிகளில் மேம்படுத்தலாம்?

 * அனைவரையும் நியாயமாக நடத்துதல்.

*  அடைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.

* அனைவரும் வாய்ப்புகள் பெறுவதை உறுதிப்படுத்துதல்.

* முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.

* சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல் 

*கல்வி 


                                பகுதி - ஈ
IV.செயல்பாடு

மத்துவத்தின் வகைகளைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்பவும்.

1 ) குடிமை சமத்துவம்

2 ) அரசியல் சமத்துவம்

3 ) பாலின சமத்துவம்

4 ) சமூக சமத்துவம்

*******************    **********   ************

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி அவர்கள் .

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

*****************    *************   ***********












Post a Comment

0 Comments