வகுப்பு - 7 , தமிழ் - இயல் 1
உரைநடை உலகம்
பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
பகுதி - 2
*************** ************* ***********
வணக்கம் நண்பர்களே ! நாம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் ஒன்றில் உரைநடை உலகம் பகுதியில் பேச்சுமொழியும் எழுத்துமொழியும் பகுதி 1 முன்பு கண்டோம். அதன் தொடர்ச்சியை இன்றைய வகுப்பில் நாம் காண்போம்.
நம்முடைய பெரும்புலவர் .திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தை முதலில் காண்போம்.
காட்சிப் பதிவினைக் கண்டீர்களா ? மிகவும் எளிமையாகப் புரிந்ததா ? இப்போது பாடக் கருத்துகளைக் காண்போம்.
எழுத்துமொழி
பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது. எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும். எடுத்துக்காட்டாக முற்காலத்தில் அண்ணா, காலை என்று எழுதியவற்றை இக்காலத்தில் அண்ணா, காலை என்று எழுதுகிறோம்.
பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்துமொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர். பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும். எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக 'நல்லாச் சாப்ட்டான்' என்பது பேச்சு மொழி. 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது எழுத்துமொழி.
பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்துமொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு. 'உம்', 'வந்து' போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால் எழுத்து முறையில் இவை இடம் பெறுவதில்லை.
பேச்சு மொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அஃது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்து மொழியில் இடமில்லை.
0 Comments