6 ஆம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு - இயல் 1 - வினாத்தாளுக்கான விடைகள் முழுமையும் / 6th TAMIL - EYAL 1 - ASSIGNMENT - ANSWER

 

                             ஒப்படைப்பு

               வகுப்பு : 6             பாடம் : தமிழ்


                                   
இயல்-1


பகுதி -அ


1. ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது


அ. அமுது+தென்று 

ஆ. அமுது+என்று 

இ. அமுது+நன்று 

ஈ. அமு+தென்று

விடை : ஆ  )  அமுது + என்று

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கி விட்டது.


அ. மேதினி 

ஆ. நிலா 

இ. வானம் 

ஈ. காற்று

விடை :  அ ) மேதினி 

3. எட்டு + திசை என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது


அ - எட்டி திசை 

ஆ. எட்டு திசை 

இ. எட்டுத்திசை 

ஈ. எட்டி இசை

விடை  :  இ ) எட்டுத்திசை


4. தொன்மை என்னும் சொல்லின் பொருள்


அ. புதுமை 

ஆ. பழமை 

இ. பெருமை 

ஈ. சீர்மை

விடை : ஆ ) பழமை 


5. உயிர் எழுத்துக்கள் மொத்தம்


அ. 5     ஆ.7      இ. 12    ஈ. 18

விடை : இ ) 12


கோடிட்ட இடங்களை நிரப்புக


6. பாரதிதாசனின் இயற்பெயர் -----

விடை : சுப்புரத்தினம்

7. தமிழ் கும்மிப் பாடல் --------- என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

விடை : கனிச்சாறு 


8. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான நுால்

விடை :  தொல்காப்பியம் 


9. நீண்ட நெடுங்காலமாக அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் ---------

விடை :  தமிழர்கள்


10. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ----------- எனப்படும்.

விடை :  மாத்திரை 


                               பகுதி - ஆ

II. குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

* அமுது     * நிலவு      *  மணம்    *  பால் 

*வானம்     *  தோள்       *  வாள்

2. தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

          தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

3. பூவின் ஏழு நிலைகள் யாவை?

    * அரும்பு 

     * மொட்டு 

         * முகை 

             * மலர் 

                 *  அலர்

                     * வீ 

                          * செம்மல்

4. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் இரண்டு எழுதுக?

   * மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள்.

  *  இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி உயர்திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.

   *  இஸ்ரோவின் தற்போதைய தலைவர் உயர்திரு.சிவன் அவர்கள்.

5. ஐந்து வகை இலக்கணம் எவை?

      * எழுத்திலக்கணம் 

       * சொல் இலக்கணம் 

         * பொருள் இலக்கணம் 

           * யாப்பு இலக்கணம்

             * அணி இலக்கணம் 


                                பகுதி - இ

III. பெருவினா

1. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?

* சிலப்பதிகாரம் 

* மணிமேகலை 

* சீவகசிந்தாமணி 

* வளையாபதி 

*  குண்டலகேசி 


IV. செயல்பாடு

மேற்கண்ட படத்தை உற்று நோக்கி , கீழ்க்காணும் படத்திலுள்ள பூக்களின் பல்வேறு நிலைகளுக்கான பெயர்களை எழுதுக.

* மொட்டு

 * முகை 

*  மலர் 

* அலர்


**************   *************    *************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

1 Comments