பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - பெருமாள் திருமொழி - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 / 10th TAMIL - EYAL 4 - PERUMAL THIRUMOZHI - REDUCED SYLLABUS - 2021 - 22

 

                 பத்தாம் வகுப்பு  - தமிழ் 

          இயல் - 4 , கவிதைப்பேழை 

பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் 

( முன்னுரிமைப் பாடத்திட்டம் - 2021 - 22 ) 


***********    ***************   ***********

                     வணக்கம் அன்பு  நண்பர்களே ! இன்றைய வகுப்பில் கவிதைப்பேழையாக அமைந்துள்ள பெருமாள் திருமொழி பற்றிக் காண்போம்.

           முதலில் பாடலுக்கான பொருளை நம்முடைய பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் காண்போம்.




நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பற்றிய செய்திகளை நூல்வெளி பகுதியில் காண்போம்.

                  நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில்  691 ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.  பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.  இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

நுழையும்முன்

               தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். அதன் விளைவாக , சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன. அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துகள் செறிந்திருக்கின்றன.

                               பாடல் 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே !*

                                                பாசுர எண் : 691

பாடலின் பொருள் :

                                மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவப் கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே ! அது போன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

*************     ************   **************

Post a Comment

0 Comments