பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள் - கொடுங்கோன்மை - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 / 10th TAMIL - EYAL 3 - THIRUKKURAL - KODUNKONMAI - REDUCED SYLLABUS - 2021 - 22


      பத்தாம் வகுப்பு - தமிழ் 

    இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம் 

                         திருக்குறள் 

         கொடுங்கோன்மை  ( 56 ) 


****************    ***********   ***********

              வணக்கம் அன்பு நண்பர்களே !  வாழ்வியல் இலக்கியமாம் திருக்குறளை நாம் கடந்த மூன்று  வகுப்புகளில் கற்றோம் . இன்னும் நான்கு  வகுப்புகளில் திருக்குறள்தான் கற்க உள்ளோம்.

            இன்றைய வகுப்பில் கொடுங்கோன்மை என்ற அதிகாரத்திலுள்ள  இரண்டு  குறட்பாக்களைக் காண்போம்.

          முதலில் நம்முடைய பெரும்புலவர்.திரு. மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.




காட்சிப் பதிவில் கண்ட இரண்டு குறட்பாக்களையும் வரிவடிவில் காண்போமா ?

9 ) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 

கோலொடு நின்றான் இரவு.

பொருள்

                  ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது , வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

10 ) நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

பொருள்

                  தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னவன் ,தன் நாட்டை நாள் தோறும் இழக்க நேரிடுவான்.

*************    ************    **************














Post a Comment

0 Comments