பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
பெரியாரைத் துணைக்கோடல் ( 45 )
**************** *********** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! வாழ்வியல் இலக்கியமாம் திருக்குறளை நாம் கடந்த இரண்டு வகுப்புகளில் கற்றோம் . இன்னும் ஐந்து வகுப்புகளில் திருக்குறள்தான் கற்க உள்ளோம்.
இன்றைய வகுப்பில் பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்திலுள்ள மூன்று குறட்பாக்களைக் காண்போம்.
முதலில் நம்முடைய பெரும்புலவர்.திரு. மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.
மூன்று குறட்பாக்களுக்கும் முத்தாய்ப்பாய் அமைந்த விளக்கத்தைக் கண்டோம். இனி வரி வடிவில் காண்போம்.
6 ) அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பொருள் :
கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.
7 ) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
பொருள் :
குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன் , பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
8 ) பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.*
பொருள் :
தானொருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் , பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.
*********** ************ **************
0 Comments