பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள் - மெய் உணர்தல் - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22/ 10th TAMIL - EYAL 3 - THIRUKKURAL - MEI UNARTHAL - REDUCED SYLLABUS - 2021- 22

 

              பத்தாம் வகுப்பு - தமிழ் 

                 இயல் - 3  , பண்பாடு

                வாழ்வியல் இலக்கியம் 

                        திருக்குறள் 

                      மெய் உணர்தல் 

***********    **********   *******   **********

              வணக்கம் நண்பர்களே ! திருக்குறளில் ஒழுக்கமுடைமை அதிகாரத்திலுள்ள குறட்பாக்கள் பற்றிக் கடந்த வகுப்பில் கண்டோம். இன்றைய வகுப்பில்  மெய் உணர்தல் அதிகாரத்திலுள்ள இரண்டு குறட்பாக்களையும் அதற்கான பொருளையும் காண்போம்.

             முதலில் குறட்பாக்களுக்கான விளக்கத்தை நமது பெரும்புலவர் .திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் காண்போம்.



காட்சிப் பதிவில் குறட்பாக்களுக்கான விளக்கம் எளிதாகப் புரிந்ததா நண்பர்களே !

இனி , குறட்பாக்களையும் , அதற்கான பொருளையும் காண்போம்.

4 ) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு*

பொருள் :  எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

5 ) காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

   நாமம் கெடக்கெடும் நோய்.

பொருள் : 

        ஆசை , சினம் , அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.

*************    *************   ************

                    மகிழ்ச்சி நண்பர்களே ! அடுத்த வகுப்பில் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைக் காண்போம். நன்றி.

*****************    ***********   **************

Post a Comment

2 Comments

  1. Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete