பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 பண்பாடு
முன்னுரிமைப் பாடத்திட்டம் - 2021 - 22
வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள் - ஒழுக்கமுடைமை ( 14 )
**************** *********** **********
வணக்கம் அன்பு நண்பர்களே ! அனைவரும் நலமா ? இன்றைய வகுப்பில் இயல் 3 ல் பண்பாடு என்ற பெருந்தலைப்பில் , வாழ்வியல் இலக்கியமாக அமைந்துள்ள திருக்குறள் பற்றித்தான் இன்று படிக்கப் போகிறோம்.
முதலாவதாக ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரம் நமக்கு அமைக்கப்பட்டுள்ளது. அன்றே தமிழன் ஒழுக்கத்துடன் அதிகாரமிக்கவனாக இருந்துள்ளான் என்பதை வான் புகழ் வள்ளுவப் பேராசான் விளக்கியுள்ளார்.
ஒழுக்கமுடைமையில் உள்ள மூன்று குறட்பாக்களுக்கான விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் முதலில் காண்போம்.
நண்பர்களே ! காட்சிப்பதிவில் குறட்பாக்களுக்கான விளக்கம் மிக இனிமையாகப் புரிந்ததல்லவா ?
இப்போது குறட்பாக்களையும் , அவற்றிற்கான பொருளையும் காண்போம்.
1 ) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள் :
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக்காக்க வேண்டும்.
2 ) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள் :
ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.
3 ) உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.
பொருள் :
உலகத்தோடு ஒத்து வாழக்கல்லாதார் , பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே . ( எனக் கருதப்படுவார் )
*********** ********* ********* *********
மகிழ்ச்சி நண்பர்களே ! அடுத்த வகுப்பில் மெய் உணர்தல் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களைக் காண்போம்.
*************** ************* ************
0 Comments