பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3
வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள்
குறுவினா
1 ) நச்சப்படாதவன் செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
' நச்சப்படாதவன் ' செல்வம் : பொருள் -
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.
2 ) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இ்ல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் , துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை
3 ) பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
* உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.
* உயிரினும் ஓம்பப் படும் - உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.
* நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று - ஊரின் நடுவே நச்சு மரம் பழுத்தது போன்றது.
4 ) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது ?
அ ) கூவிளம் தேமா மலர்
ஆ ) கூவிளம் புளிமா நாள்
இ ) தேமா புளிமா காசு
ஈ ) புளிமா தேமா பிறப்பு
விடை : அ ) கூவிளம் தேமா மலர்
சிறுவினா
1 ) வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு.
- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி .
அணி விளக்கம்
உவமை , உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு அமைவது உவமையணி ஆகும்.
அணிப்பொருத்தம்
உவமேயம் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டு அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதித்தல்.
உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல்.
உவம உருபு : போலும்
ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதித்தல் , வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதைப் போன்றதாகும்.
************* ************ **************
0 Comments