பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - இலக்கணம் - தொகாநிலைத்தொடர்கள் - பகுதி 1 - எழுவாய்த்தொடர் / 10 TAMIL - EYAL 3 - KARKANDU - THOKANILAITHTHODAR - PART 1 - EZHUVAAITH THOSAR

 

                         வகுப்பு - 10 , தமிழ் 

                       இயல் 3 - கற்கண்டு

     தொகாநிலைத் தொடர்கள் - பகுதி 1 

                          எழுவாய்த்தொடர் 


**************    **************   ***********

             வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் இயல் மூன்றில் கற்கண்டாக அமைந்துள்ள தொகாநிலைத் தொடர்கள் பற்றிக் காண்போம். இதை மூன்று பகுதிகளாகக் காட்சிப் பதிவு விளக்கத்துடன் காணலாம்.

           பகுதி ஒன்றில் தொகாநிலைத் தொடர் என்றால் என்ன ? அதன் வகைகள் , முதலாவதாக உள்ள எழுவாய்த்தொடர் இவைபற்றி விரிவாக நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில்  காண்போம்.





தொகாநிலைத்தொடர்


            ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

காற்று வீசியது

குயில் கூவியது

                  முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.

                    அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.

தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்

1. எழுவாய்த்தொடர் 

                எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

இனியன் கவிஞர் - பெயர்

காவிரி பாய்ந்தது - வினை

பேருந்து வருமா? - வினா

                  மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

****************   *************  ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ***********

Post a Comment

0 Comments