இந்திய தேசிய விளையாட்டு தினம்
29 • 8 • 2021
' ஓடி விளையாடு பாப்பா ' என்றார் மாகவிஞன் பாரதி. படிப்பிற்கு எவ்வளவு முதன்மை கொடுக்கின்றோமோ அதுபோலவே விளையாட்டிற்கும் முதன்மை கொடுக்க வேண்டும்.
விளையாட்டு என்பது ஒரு கலை. இவை தொடக்கக் காலத்தில் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்தது. இன்று தனித்துவம் பெற்று பல உலகப்புகழ் சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
விளையாடுவதால் உடல்,மன நலத்துடன் சமூக நலனும் பாதுகாக்கப் படுகிறது. ஒற்றுமை,தலைமைப் பண்பு சமாதானம், மனித நேயம், மனப்பக்குவம்,வெற்றி தோல்வி சமம், நட்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விளங்குகிறது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பாகவும், பயிற்சிக்கான களமாவும் விளங்குகிறது. அவ்வீரர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்குக் கொண்டு வெற்றிகாண வகைசெய்கிறது.
இந்திய அரசு ஆகஸ்ட் 29 - ஆம் நாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக விளங்கிய ' தியான் சந்த்தைப் ' பெருமைப் படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 - ஆம் நாளை " இந்திய தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வரு கிறது.
இந்த இனிய நாளில் மக்களின் விளையாட்டு ஆர்வத்தையும், ஆரோகியத்தையும் ஊக்குவித்து சிறந்த வீரர்களை உருவாக்கும் நோக்கம் உடையதாக விளங்குகிறது.
தேசிய விளையாட்டு தினத்தன்று " குடியரசுத் தலைவரால் , விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு " ராஜீவ் காந்தி கேல் ரத்னா" , அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகளை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
தியான் சந்த் ( (Dhyan Chand )
சமேஷ்வர் சிங், சரதா சிங் இணையரின் மகனாக அலகாபாத்தில் 1905 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 29- ஆம் நாள் " தியான் சந்த்" பிறந்தார்.
இவர் ஒரு வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப் பந்தாட்ட வரலாற்றின் சிறந்த வீரர்.1928 -ஆம் ஆண்டு "ஆம்ஸ்டர்டமிலும்", 1932 - ஆம் ஆண்டு " லாஸ் ஏஞ்சலிலும் 1936 - ஆம் ஆண்டு " பெர்லினிலும் "நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் பங்குக்கொண்டார்.
1928 - முதல் 1964 - வரையிலான காலங்களில் நடந்த எட்டு விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா " தங்கப் பதக்கம் " வென்றுள்ளது.
தியான் சந்த் வளைதடிப் பந்தினைக் கையாள்வதில் மேதை என புகழப்பட்டார். 1948 - ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வளைதடிப் பந்தாட்ட தொடரில் விளையாடிய பின் ஓய்வு பெற்றார்
இவர் மொத்தம் 400 - "கோல்" அடித்துள்ளார். வளைதடிப் பந்தாட்ட வரலாற்றில் இதுவே ஒருவர் அடித்த அதிகப்படியான இலக்குகள் ஆகும். 1956 - ஆம் ஆண்டு இந்திய அரசின் " பத்ம பூஷன் " விருதைப் பெற்றார்.
தியான் சந்த் விருது ( Dhyan Chand Award )
இந்திய விளையாட்டுகளில் சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் களுக்கு , இந்திய அரசால் வழங்கப்படும் விருதாகும் . இவை புகழ்மிக்க வளைதடிப் பந்தாட்ட வீரரான " தியான் சந்த்" நினைவாக 2002 - ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்ட து.
* இந்த விருதானது 500000 - பரிசும், ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலை வடிவம்,மற்றும் அலங்கார உடையும் வழங்கப் படுகிறது.
தொன்றுதொட்டு வளைதடிப் பந்தாட்ட த்தில் இந்திய அணி தொடர் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதன் படி 1980 - ஆம் ஆண்டு " மாஸ்கோ" வில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பாஸ்கர் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது.
தற்போது டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி (வெண்கலப் பதக்க ) போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை 5 - 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 - ஆண்டுகளுக்குப் பிறகு " ஹெர்மன் பிரீத் " தலைமையிலான அணி வெண்கலம் வென்று ஒலிம்பிக் வரலாற்றில் சாதனைப் படைத்தது.
இத்தகைய சிறப்பு மிக்க விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் என்றென்றும் போற்றி வாழ்த்துவோம்! உடல் உறுதியோடு மன உறுதி பெற தொடர்ந்து விளையாடுவோம் !
************** ************* *************
0 Comments