11 - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - குறைக்கப்பட்ட பகுதி வினாத்தாள் / 11th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - REDUCED SYLLABUS QUESTION

 

            மேல்நிலை முதலாமாண்டு -

                        பொதுத்தமிழ்

            ஒப்படைப்பு - 2 - இயல் - 2

    வினாத்தாள்  - குறைக்கப்பட்ட பகுதி


( ஏதிலிக் குருவிகள் , காவியம், திருமலை முருகன் பள்ளு , யானைடாக்டர் ,  புணர்ச்சி விதிகள் )

                               பகுதி -அ

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

"வான் பொய்த்தது" - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள்

அ) வானம் இடித்தது. 

ஆ) மழை பெய்யவில்லை

இ ) மின்னல் வெட்டியது

ஈ.) வானம் என்பது பொய்யானது.

2. 2003 - ஆம் ஆண்டில் தமிழகஅரசின் விருது பெற்ற அழகிய பெரியவனின் புதினம்

அ) தகப்பன்கொடி        ஆ) அதிசயப் பூ

 இ ) தொப்புள்கொடி   ஈ) மணிக்கொடி

3. பிரமிளின் கட்டுரைத் தொகுப்பு ------

அ) நக்ஷத்திர வாசி ஆ )லங்காபுரி ராஜா 

இ ) வெயிலும் நிழலும்         எ) காற்று

4. ' பிரிந்த ' என்பது  -------

அ ) பெயரெச்சம்      ஆ)வினையெச்சம்

இ ) பண்புத்தொகை    ஈ.) வினைத்தொகை

5 . ' பள்ளு '  -------  வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

அ)  100             ஆ ) 16

இ ) 96               ஈ ) 86 

6. தொல்காப்பியம் குறிப்பிடும் ------  எனும் இலக்கிய வகையைச் சார்ந்தது  பள்ளு . 

அ) புலன்                ஆ ) கலம்பகம் 

இ ) அந்தாதி         ஈ) குறவஞ்சி,

7 ) " யானை டாக்டர்" என்றழைக்கப்படுபவர்

அ ) வேணு மோகன்  

ஆ ) வி. கிருஷ்ணமூர்த்தி 

இ ) நாராயண மூர்த்தி

ஈ.) ஜெய மோகன்

8 ) கயம் , வேழம் மாதங்கம் , கைம்மா என்ற  வேறு பெயர்களில் நிகண்டுகளில் குறிப்பிடப் படுவது

அ ) பறவை    ஆ) யானை 

இ )  டாக்டா் ஈ  )  குதிரை.

9 ) பதினெட்டு மெய்களுள் ------ மெய்கள் மட்டுமே உடம்படுமெய்களாகும்.

அ ) ழ் , ள்      ஆ ) ய் , வ் 

இ ) ஈ , இ       ஈ ) ர் , வ் 

10 ) பண்புப் பெயர் புணர்ச்சியில் இடம்பெறும் மொத்த விதிகள் -----

அ ) 8    ஆ ) 6   இ ) 3    ஈ ) 10


                               பகுதி - ஆ

II ) குறுவினா

1 ) ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது ?

2 ) காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது ? 

3 ) வளருங் காவில் முகிற்தொகை ஏறும் - பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் வண்ணமிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன ?

4 ) பள்ளு - குறிப்பு வரைக.

5 ) புணர்ச்சி விதி தருக - செங்கயல்

                          பகுதி - இ

III ) சிறுவினா

1 ) காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது ?

2 ) சலசல வாவியில் செங்கயல் பாயும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

3 ) தென்கரை நாட்டின் வளம் குறித்து பெரியவன் கவிராயர் குறிப்பிடுவன யாவை ?

4 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக.

     i )  ஈன்ற   ii )  அலர்ந்து 

5 ) குற்றியலுகரப் புணர்ச்சி , முற்றியலுகரப் புணர்ச்சிகளைச்  சான்றுடன் விவரி.


                               பகுதி - ஈ 

IV ) நெடுவினா

1 ) யானை டாக்டர் வாயிலாக இயற்கை , உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

2 ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை , தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

*************     **************     ************

வினா உருவாக்கம்.

திருமதி.இரா.மனோன்மணி

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

 திண்டுக்கல்.

*************    **************    **************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************

Post a Comment

0 Comments