ஏழாம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - வினாக்களும் விடைகளும் - இயல் 2 - அணிநிழல் காடு / 7th TAMIL -ASSIGNMENT 2 - EYAL 2 - QUESTION & ANSWER

 

              ஒப்படைப்பு 2 - விடைகள்

                         வகுப்பு: 7

                  பாடம்: தமிழ்  - இயல் - 2

                           பகுதி-அ

1.ஒருமதிப்பெண்வினா

1.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க,

அ) நரி ஊளையிடும் 

ஆ)புலிமுழங்கும்

இ) யானை உறுமும் 

ஈ)குதிரை கத்தும்

விடை : அ ) நரி ஊளையிடும்

2.கீழ்க்காணும் தொடர்களில் ' அரவம்' என்னும் பொருள் தரும் சொல் அமைந்த தொடர் எது?

அ) பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி உண்ணும்,

ஆ) கரடிகள் கரையான் புற்றுகளை நோக்கிச் செல்கின்றன.

இ) குரங்குகள் மரத்தில் இருந்து கனிகளைப் பறித்து உண்ணுகின்றன.

ஈ) பன்றிகளைக் கண்ட பாம்புகள் கலக்கம் அடைகின்றன.

விடை :  ஈ ) பன்றிகளைக் கண்ட பாம்புகள் கலக்கம் அடைகின்றன.

3. இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வருபவை எவை?

அ) காகங்கள் 

ஆ) மரங்கொத்திப் பறவைகள்

இ) வௌவால்கள்

ஈ)புறாக்கள்

விடை : இ ) வௌவால்கள்

4.கீழ்க்காணும் சொற்களில் 'துஷ்டி' என்னும் பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) பயம்

ஆ) துக்கம்

இ)மகிழ்ச்சி

ஈ) வெறுப்பு

விடை :  ஆ ) துக்கம்

5. மிகுந்த நினைவாற்றலைக் கொண்ட விலங்கு எது?

அ) சிங்கம்

ஆ கரடி

இ) புலி 

ஈ) யானை

விடை : ஈ ) யானை 

6.ஒரு நாட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்கும் விலங்கு எது?

அ) புலி      ஆ கரடி

இ)சிங்கம்    ஈ) மான்

விடை : அ ) புலி 

7. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

அ) திருச்சி       ஆ)மதுரை 

இ) கன்னியாகுமரி   ஈ) மேட்டுப்பாளையம்

விடை : ஈ ) மேட்டுப்பாளையம்

8.ஆசியச் சிங்கங்கள் வாழும் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) உத்திரப்பிரதேசம்

இ) ஆந்திரப்பிரதேசம் 

ஈ) குஜராத்

விடை :  ஈ ) குஜராத்

9. ஒன்றரை மாத்திரை அளவுபெறும் 'ஐ'காரம் இடம்பெறும் சொல்லைத் தேர்ந்தெடுக்க,

அ) வையம்

ஆ) சமையல் 

இ) பறவை

ஈ) இளைஞன்

விடை : அ ) வையம்

10. 'முஃடீது' என்னும் சொல்லில் அமைந்த ஆயுத எழுத்து எத்தனை மாத்திரை அளவு ஒலிக்கிறது?

அ) ஒன்று

ஆ) அரை

இ) கால்

ஈ) ஒன்றரை

விடை : இ ) கால் 

                                  பகுதி ஆ

II. சிறுவினா

1. பாம்புகள் கலக்கமடையக் காரணம் என்ன?

           பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.

2.காட்டில் கார்த்திகை விளக்குகளாகக் காட்சி அளிப்பவை எவை?

       மலர்கள்

3.அதிமதுரத் தழையைத் தின்ற யானை புதுநடை போடுவதன் காரணம் என்ன?

               அதுமதுரத் தழைகள் மிகுந்த சுவையை  உடையன . எனவே யானைகள் புதுநடை போடுகின்றன.

4.அதிமதுரம் குறித்து நீங்கள் அறிவது யாது?

அதிமதுரம் மிகுந்த சுவையுடையது

5.ஆசியயானைகளுக்கும், ஆப்பிரிக்க யானைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

         ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.  பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் , ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.


6.'பண்புள்ள விலங்கு' என்று புலிகள் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

      புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே , அது பண்புள்ள விலங்கு என அழைக்கப்படுகிறது.


7. மகரமெய் முழுமையாக ஒலிக்கும் இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

    அம்மா , பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகரமெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

                              பகுதி-இ

III. பெருவினா

1. பெருவாழ்வு வாழ்ந்த மரம் விளக்குக.

* பெருவாழ்வு வாழ்ந்த மரம் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டது.

*விடிந்தும் விடியாததுமாய்த் துக்கம் விசாரிக்க ஊர்மக்கள் குழந்தைகளோடு அங்கு விரைந்து செல்கிறார்கள்

*குன்றுகளின் நடுவே மாமலைபோல் அந்த மரம் நிற்கட்டும் 

* நேற்று மதியம் நண்பர்களுடன் தன்மகன் அந்த மரத்தின் நிழலில் தான் விளையாடினான்.

* மரத்தின் குளிர்ந்த நிழலில் தான் கிளியாந்தட்டு விளையாடி மகிழ்ந்தோம்.


2.யானை மற்றும் கரடி போன்ற விலங்குகளின் வாழ்வியல் குறித்து நீ அறிவது யாது?

* உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை , இன்னொன்று ஆப்பிரிக்க யானை .

* ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை.

* ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

* யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழும்.

* பெண் யானைதான் தலைமை தாங்கும்.

* யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .

கரடி 

* கரடி ஓர் அனைத்துண்ணி .

* பழங்கள் , தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும்.

* உதிர்ந்த மலர்கள் , காய்கள் ,கனிகள் , புற்றீசல் ஆகியவற்றைத் தேடி உண்ணும்.

* கறையான் அதற்கு மிகவும் பிடித்தமான உணவு.

* நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.


                                       பகுதி-ஈ

IV.செயல்பாடு:

காட்டு விலங்குகள் சார்ந்த ஒலி மரபுத்தொடர்களைத் (5)தனித்தாளில் எழுதுக




GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************





Post a Comment

3 Comments