பத்தாம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - வினாக்களும் விடைகளும் / 10th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - QUESTION & ANSWER

 


                    வகுப்பு: பத்து

             பாடம் : தமிழ் - இயல் - 2

            ஒப்படைப்பு - 2 , விடைகள் 

     இயல்- 2- இயற்கை, சுற்றுச் சூழல்

பகுதி - ஆ

1.ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படையான சூழல் எது?

 அ ) மலை 

ஆ ) இயற்கை

இ) கடல்

ஈ)  காடு

விடை : ஆ ) இயற்கை 

2. கடுங்காற்று என் தன் எதிர்ச்சொல் தருக

அ ) கடல் காற்று     ஆ) மென்காற்று 

இ) சுழல்காற்று ஈ) புயல் காற்று

விடை : ஆ ) மென்காற்று 

3. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - எனப் பாடியவர் பார்?

அ) ஒளவையார்  ஆ ) பாரதியார்

இ) திருவள்ளுவர்  ஈ) இளங்கோவடிகள்

விடை : ஈ ) சிலப்பதிகாரம்

4. முல்லைத் திணைக்குரிய  உரிப்பொருள்

அ) இருத்தல்   ஆ) இரங்கல்

 இ) ஊடல்    ஈ) புணர்தல்

விடை : அ ) இருத்தல்

5. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது?

அ ) நெடுநல்வாடை 

ஆ) திருமுருகாற்றுப்படை 

இ )பட்டினப்பாலை 

ஈ) முல்லைப்பாட்டு

விடை : ஈ ) முல்லைப்பாட்டு 

6. கரும்பு தின்றான் என்பது எவ்வகைத் தொடர் ?

அ ) வினையெச்சுத் தொடர் 

ஆ ) தொகை நிலைத் தொடர் 

இ) தொகாநிலைத் தொடர்

ஈ) விளித்தொடர்

விடை : ஆ ) தொகைநிலைத்தொடர்

7 ) மூதூர் - இலக்கணக்  குறிப்பு தருக.

அ) வினைத் தொகை ஆ) பண்புத்தொகை

இ) உவமைத் தொகை ஈ) உம்மைத் தொகை

விடை : ஆ ) பண்புத்தொகை

8 ) மைவிகுதி பெறும் தொகை

அ) பண்புத்தொகை ஆ) வேற்றுமைத் தொகை

இ) உவமைத் தொகை ஈ) உம்மைத் தொகை

விடை :  அ ) பண்புத்தொகை

9. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் படைப்பு எது?

அ) அழகின் சிரிப்பு

ஆ) பாண்டியன் பரிசு

இ ) பாஞ்சாலி சபதம்

 ஈ )குடும்ப விளக்கு

விடை : இ ) பாஞ்சாலி சபதம்

10. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ ) மு. மேத்தா

ஆ ) புதுமைப்பித்தன் 

இ ) பாரதியார்

ஈ) நாகூர் ரூமி

விடை : இ ) பாரதியார்

                        பகுதி.ஆ

குறுவினா

11. வசன கவிதை - குறிப்பு வரைக.

              உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.

12. காற்றைச் சிறப்பித்து ஔவியார் எவ்வாறு பாடியுள்ளார் ?

     வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் 

    ஆயுள் பெருக்கம்உண் டாம் 

என்று வாயுதாரணை எனும் அதிகாரத்தில் ஔவையார் காற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

13. நான்கு திசைகளிலிருந்து வீசக் கூடிய காற்றின் பெயர்களை எழுதுக.

கிழக்கு  -  கொண்டல்

மேற்கு    -  கோடை

வடக்கு   -  வாடை

தெற்கு   - தென்றல்

14. மரம் தரும் வரமாக காற்று கூறுவது யாது?

           ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள் என்று மரம் தரும் வரமாகக் காற்றுக் கூறுகிறது.


15. விரிச்சி - விளக்கம் தருக.

* ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.

* அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழி கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.


                    பகுதி- 3

III, நெடுவினா

16. காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

*  குப்பைகள், நெகிழிப் பைகள், மெது உருளைகள் (tyres) போன்றவற்றை எரிப்பது, குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துவது, மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பது, புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாத தனிமனிதரின் மிகுதியான ஊர்திப்பயன்பாடு, வானூர்திகள் வெளிவிடும் புகை இவற்றால்  கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்று நோய், இளைப்பு நோய் எனப் பல நோய்கள் ஏற்படுகின்றன.

*  காற்று  மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.


17. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.


* அகன்ற உலகத்தை வளத்தைப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த வலிமையான கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய
பொழுது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்.

* அம்மேகமானது ஒலி முழுங்குகின்ற குளிர்ச்சியான கடல் நீரைப் பருகி, வலப்பகக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு விரைந்து சென்று, பெரிய மழையைப் பொழிகிறது. அம்மாலைப்
பொழுதானது பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.

* முதிய பெண்கள் மிகுந்த காவலுடைய ஊர்ப்பக்கம் சென்று யாழிசையைய் போன்று வண்டுகள் ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு
வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

* அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் “புல்லை மேய்ந்து தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே” என்றாள்.

* இது நல்ல சொல் எனக் கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர். நின் தலைவன்
பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே மனத்தடுமாற்றம் கொள்ளாதே என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர். 

இவையே முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளாகும்.

**************    ***************    ***********



GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************









Post a Comment

0 Comments