12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2021 - 2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 2 , பகுபத உறுப்புகள் - வினாக்களும் விடைகளும் / 12th REFRESHER COURSE - 2021 - 2022 - QUESTION & ANSWER

 

                    

                     பொதுத்தமிழ்

                          வகுப்பு - 12 

            புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                           2021 - 2022

                  கற்றல் விளைவுகள் , 

      கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 

      மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

                             தலைப்பு  : 2

                  ஆ.  பகுபத உறுப்புகள்




     வணக்கம் அன்பு நண்பர்களே ! நம்முடைய பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள தமிழ்நாடு அரசின் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12 ஆம் வகுப்பு பொதுத் தமிழில் மொத்தம் 30 தலைப்புகள் உள்ளன. இதில்  கற்றல் விளைவுகள் , ஆசிரியர் செயல்பாடு , கற்பித்தல் செயல்பாடுகள் , மாணவர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு என்று மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

         செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்கட்டகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பையும் , அதிலுள்ள செயல்பாடுகளையும் , மதிப்பீடுகளுக்கான விடைகளையும் காண்போம்.

           2 )  பகுபத உறுப்புகள்

கற்றல் விளைவுகள்

* பதம் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் அறியச் செய்தல்.

* பகுபதத்தின் உறுப்புகள் (6) பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளுதல்.

*  சொற்களைப் பொருள் புரிந்து காலத்திற்கேற்பப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

            மாணவர்களே! நாம் மனித உடல் உறுப்புக்களான கண், காது, மூக்கு, கை, கால் எனப் பகுதி பகுதியாகப் பிரிப்போம். அதே போல் தமிழில் உள்ள சொற்களையும் பொருள் தன்மையிலும் உறுப்புகள் தன்மையிலும் பிரிக்கலாம் என்று கூறி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

4. சாரியை

* இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

சான்று : பார்த்தனன் = பார் + த் + த் + அன் + அன்

* சந்தி வர வேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனை சாரியை என்று குறிப்பிடல் வேண்டும்.

சான்று:

தருகுவென் = தா ( தரு) + கு + வ் + என்

*  சாரியைக்குப் பொருள் இல்லை.

குறிப்பு :

* அன், அள், அர் விகுதிக்கு 'அன்'னே சாரியை.

*  ஆன், ஆள், ஆர் விகுதிக்கு 'அன்' சாரியை வராது.

செயல்பாடு : 2

5. சந்தி

# பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

# சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.

#  சந்தியாக வரும் எழுத்துகள் - த், ப், க் உடம்படு மெய்களும் (ய்,வ்) சந்தியாக வரும்.

சான்று:

* அசைத்தான் = அசை + த் + த் + ஆன்

* மயங்கிய = மயங்கு + இ (ன்) + ய் + அ

செயல்பாடு : 3

6. விகாரம்

பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவில் ஏற்படும் மாற்றம் விகாரம் ஆகும்.

சான்று

* நின்றான் = நில் (ன்) + ற் + ஆன் ( திரிதல்)

* வணங்கிய = வணங்கு + இ(ன்) + ய் + அ ( கெடுதல்)

* கண்டான் = காண் (கண்) + ட் + ஆன் ( நெடில் குறிலாகக் குறுகியது )

எழுத்துப்பேறு :

* பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு

* காலம் காட்டாது

*  எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்

சான்று :

* பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)

* மொழியாதான் = மொழி+ய்+ஆ (எதிர்மறை இடைநிலை)+த் (எழுத்துப்பேறு) + ஆன்

மாணவர் செயல்பாடு

    ஒரு மாணவன் கரும்பலகையில் ஒரு சொல்லை எழுத மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பிரித்துக்காட்டி உறுப்புகளைக் கூறச் செய்தல்.

மதிப்பீடு

1. காண்பித்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

காண்பித்தான் - காண்பி + த் + த் + ஆன்

காண்பி - ( பிறவினைப் ) பகுதி 

த்  - இறந்த கால இடைநிலை 

த்  - சந்தி 

ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.


2. எழுத்துப்பேறு வரையறு.

* பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு

* காலம் காட்டாது

*  எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்

சான்று :

* பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)

3. பகுபத உறுப்புகள் எத்தனை ? அவை யாவை?

    பகுபத உறுப்புகள் 6 : அவை , 

1 ) பகுதி 

2 ) விகுதி

3 ) இடைநிலை 

4 ) சாரியை 

5 ) சந்தி 

6 ) விகாரம் 

****************     **********   ***************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

0 Comments