பொதுத்தமிழ்
வகுப்பு - 12
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
கற்றல் விளைவுகள் ,
கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
தலைப்பு : 1
அ. பகுபத உறுப்புகள்
வணக்கம் அன்பு நண்பர்களே ! நம்முடைய பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள தமிழ்நாடு அரசின் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12 ஆம் வகுப்பு பொதுத் தமிழில் மொத்தம் 30 தலைப்புகள் உள்ளன. இதில் கற்றல் விளைவுகள் , ஆசிரியர் செயல்பாடு , கற்பித்தல் செயல்பாடுகள் , மாணவர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு என்று மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்கட்டகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பையும் , அதிலுள்ள செயல்பாடுகளையும் , மதிப்பீடுகளுக்கான விடைகளையும் காண்போம்.
1 ) பகுபத உறுப்புகள்
கற்றல் விளைவுகள்
* பதம் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் அறியச் செய்தல்.
* பகுபதத்தின் உறுப்புகள் (6) பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளுதல்.
* சொற்களைப் பொருள் புரிந்து காலத்திற்கேற்பப் பயன்படுத்தும் திறன் பெறுதல்
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே! நாம் மனித உடல் உறுப்புக்களான கண், காது, மூக்கு, கை, கால் எனப் பகுதி பகுதியாகப் பிரிப்போம். அதே போல் தமிழில் உள்ள சொற்களையும் பொருள் தன்மையிலும் உறுப்புகள் தன்மையிலும் பிரிக்கலாம் என்று கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு : 1
பதம் என்பதன் வரையறை :
ஓர் எழுத்துத் தனித்தோ (அ) ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். பதம் - பகுபதம், பகாபதம் என இரண்டு வகைப்படும்.
" எழுத்து தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்
அது பகாப்பதம், பகுபதம் என இருபாலாகி இயலும் "
என்ப. (நன்னூல் -128)
பதம் = சொல், கிளவி, மொழி என்பர்.
பகுத்தல் = பங்கிடுதல், கூறிடுதல், பிரித்தல் என பொருள் கூறலாம்.
பதம் (2)
பகுபதம் (பிரிக்க முடியும் சொற்கள் )
(பிரித்தால் பொருள் தரும்)
சான்று : கொள்வார் = கொள் + வ் + ஆர்
பகாப்பதம் (பிரித்தால் பொருள் தராத சொற்கள்)
சான்று : கண், சால, பிற
குறிப்பு :
பெயர்ப்பகுபதச் சொற்களைக் காட்டிலும் வினைப் பகுபதச் சொற்களே வழக்கில் மிகுதி.
செயல்பாடு: 2
பகுபத உறுப்புகள் - ஆறு. அவையாவன பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்.
1. பகுதி: (முதனிலை)
* ஒரு சொல்லின் முதலில் வரும் அடிச்சொல்லே பகுதி ஆகும். இதனை வேர்ச்சொல் என்றும் அழைப்பர்.
* விகுதி பெறாத கட்டளை (அ) ஏவல் வினையே பகுதி.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
2 Comments
12th Tamil
ReplyDeleteமிகவும் பயனுள்ள இணைப்புகள்
ReplyDelete