வகுப்பு - 11 , தமிழ் - இயல் - 2
கவிதைப்பேழை - ஏதிலிக்குருவிகள்
- அழகிய பெரியவன்
*********** ************* *************
வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் இயல் 2 ல் கவிதைப்பேழையாக அமைந்துள்ள ஏதிலிக்குருவிகள் பற்றிக் காண்போம்.
பாடப்பகுதிக்குள் செல்லும்முன் கவிதை சொல்லும் பொருளை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவில் காண்போமா ?
கவிதையை இயற்றிய ஆசிரியரைப் பற்றிய செய்தியை நூல்வெளி பகுதியில் காண்போம்.
நூல்வெளி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத்தளங்களில் இயங்குபவர். 'தகப்பன்கொடி ' புதினத்திற்காக2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். குறடு , நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் உனக்கும் எனக்குமான சொல், அருப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகள்.
நுழையும்முன்
உயிர்களின் இருப்பை இயற்கைச்சூழலே முடிவு செய்கிறது. இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி மழைத்துளி மண்ணில் முதல்துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன. சூழலியல் மாற்றத்தால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை,
குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் காரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர் புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் கருவிகள்
எங்கோ போயின.
அழகிய பெரியவன்
************** *************** ************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments