10 அறிவியல் - ஒப்படைப்பு - விடைகள் அலகு 7 - வேதியியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் / 10 SCIENE - UNIT 7 - QUESTION & ANSWER

 

                  ஒப்படைப்பு - விடைகள்

           வகுப்பு - 10      அறிவியல் 

                          அலகு - 7

                       வேதியியல்

அணுக்களும் மூலக்கூறுகளும்

                       பகுதி - அ


1. ஒரு மதிப்பெண் வினாக்கள்


1) 17CI 35 ,
 17CI 37 ஐசோடோப்பில் உள்ள எலக்ட்ரான், புரோட்டான் மற்றும்
நியூட்ரான்களின் எண்ணிக்கை


அ) 17e-, 17p+, 17n

17e-, 17p+, 19n


ஆ) 18e-, 18p+, 17n

17e-, 20p+, 19n


இ ) 17e-, 17p+, 18n

17e-, 17p+, 20n


ஈ) 18e-, 17p+, 18n

20e-, 20p+, 18n

விடை:  இ ) 17e-, 17p+, 18n

                       17e-, 17p+, 20n


2. ஐசோபார்கள் என்பதன் வரையறை

அ) ஒரே அணு எண்ணும், வேறுபட்ட நிறை எண்ணும் கொண்ட தனிமங்கள்

ஆ) ஒரே நிறை எண்ணும் , வேறுபட்ட அணு எண்ணும் கொண்ட வெவ்வேறு
தனிமத்தின் அணுக்கள்

இ) ஒரே மாதிரியான இணைதிறன் கொண்ட தனிமங்கள்

) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) ஒரே நிறை எண்ணும் , வேறுபட்ட அணு எண்ணும் கொண்ட வெவ்வேறு  தனிமத்தின் அணுக்கள்.

3. குளுக்கோஸ் மூலக்கூறின் அணுக்கட்டு எண்

அ ) 6    ஆ ) 12     இ) 24      ஈ) 18

விடை: இ) 24

4 )  5 மோல் சோடியத்தின் நிறையைக் கண்டறிக.

அ)46g        ஆ) 34g    இ) 105g     ஈ) 115g

விடை: ஈ) 115 g

5)  3 மோல் இரும்பில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை

அ) 6.023x10 23        ஆ) 18.069x10 23

இ) 12.046x10 23

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: ஆ) 18.069x10 23


                                பகுதி - ஆ

II. குறு வினா

6. ஒப்பு அணு நிறை - வரையறு

                 ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணுநிறைக்கும் C-12
அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும். இது  " A''
என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனை " திட்ட அணு எடை" எனவும் அழைக்கலாம்.


Ar= ஒரு தனிமத்தின ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை

------------------------------------------------------------------

ஒரு C-12 அணுநிறையில் 1/12 பங்கின் நிறை


7.வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டு தருக.


கார்பன் மோனாக்ஸைடு - CO
ஹைட்ரஜன், குளோரைடு - HCL


8. 46கி சோடியத்தின் மோல்களைக் கணக்கிடு.

மோல்களின் எண்ணிக்கை = நிறை / 
அணு நிறை

                       46

                     --------  = 2 மோல்

                          23

                             பகுதி - இ

III. பெரு வினா


9. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.

    * அணு என்பது பிளக்கக்கூடிய துகள்.

    * ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு         அணுநிறைகளைப்   பெற்றுள்ளன.                     

     *  வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்               ஒரே அணுநிறைகளைப்பெற்றுள்ளன. 

     *  அணுவை ஆக்கவோ, அழிக்கவோ                        முடியாது ஒரு தனிமத்தின்
          அணுக்களை மற்றொரு தனிமத்தின்                  அணுக்களாக மாற்ற முடியும்
        (செயற்கை மாற்று தனிமமாக்கல் முறை)

      *  அணுவானது எளிய முழு எண்களின்                  விகிதத்தில் இருக்க வேண்டிய
           அவசியமில்லை.

      * அணு என்பது வேதிவினையில் ஈடுபடும்           மிகச் சிறிய துகள்.


      *  ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன்              ஆற்றலைக் கணக்கிட முடியும்.
          (E = mc')

***************    *************   ************

Post a Comment

0 Comments