பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3
மொழியை ஆள்வோம் !
கடிதம் எழுதுதல்
************** ************** ************
கடிதம் எழுதுக
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு, தரமற்றதாகவும், விலை
கூடுதலாகவும் இருந்தது குறித்து, உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்
நாள்: 07 - 08 - 2021 ,
இடம்: சென்னை.
அனுப்புநர்
த.தமிழமுதன் ,
எண். 16, பாரதி தெரு,
மாதா நகர், சென்னை - 80.
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
அரசு உணவுக் கட்டுப்பாட்டுக் கழகம்,
சென்னை 6.
-
ஐயா,
பொருள்: தரமற்ற உணவு பற்றிய புகார் தொடர்பாக.
வணக்கம். இன்று காலை நான் சிற்றுண்டி உண்பதற்காக எனது வீட்டின் அருகில் இருந்த உணவகத்திற்குச் சென்றேன். நான்கு இட்லியும் ஒரு வடையும் வாங்கினேன். இட்லி சற்றுப் புளிப்புச் சுவையுடனும், கல் போன்றும் இருந்தது. வடையும் ஒருநாள் முன்னதாக
தயாரித்தது போல் இருந்தது. ஆனால், அதற்கான விலையோ வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஏன் உணவு இப்படி இருக்கிறது என்று உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் உரிய பதில் அளிக்கவில்லை.
தரமற்ற உணவை வியாபாரம் செய்யும் அந்த உணவு விடுதியின்மேல், தக்க நடவடிக்கை எடுக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விடுதியின் பெயர்
“கண்ணன் விரைவு உணவகம்”
இடம் : அன்பு நகர் முதல் தெரு, அதன் உரிமையாளர் பெயர் கண்ணன்
உடனடியாக அவ்விடுதியின் மேல் நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டுகிறேன்.
நன்றி
இப்படிக்கு,
த.தமிழமுதன் .
அஞ்சல் முகவரி:
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
அரசு உணவுக் கட்டுப்பாட்டுக் கழகம்,
சென்னை - 6.
*************** ************ *************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Super
ReplyDelete