ஒப்படைப்பு
வகுப்பு :10 பாடம் : அறிவியல்
அலகு - 1 இயக்கவிதிகள்
பகுதி - அ
1) ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ)பொருளின் எடை
ஆ)கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
விடை: இ) பொருளின் நிறை
2. ஒரு ராக்கெட்டில், எரிபொருளின் எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான வாயுக்கள் அதன் வால் முனை வழியாக கீழ்நோக்கிய திசையில் மிகப்பெரிய வேகத்துடன் தப்பிக்க அனுமதிக்கப்படுகிறது மற்றும்ராக்கெட்டை மேல்நோக்கி நகர்த்த வைக்கிறது. ராக்கெட் எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது?
அ) நிலைம திருப்பு திறன்
ஆ) உந்த அழிவின்மை விதி
இ)நியூட்டனின் முதல் விதி
ஈ ) நியூட்டனின் ஈர்ப்பு விதி
விடை: ஆ) உந்த அழிவின்மை விதி
3.இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
i) பறக்கத் தயாராகும் ஒரு விமானத்தின் உள்ளே இருக்கும் ஒரு விமானி நியூட்டனின் முதல் விதிப்படி செயல்படுகிறார்.
ii) சீரான வேகத்தில் இயங்கும் ஒரு தொடர் வண்டியின் உள்ளே இருப்பவர் நியூட்டனின் முதல் விதிப்படி செயல்படுகிறார். இவற்றில் எது சரி?
அ) i மட்டும் ஆ) ii மட்டும்
இ) ) i & ii இரண்டும் சரி
ஈ) i & ii இரண்டும் தவறு
விடை: இ) i மற்றும் iiம் சரி
4. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க எந்த விதி பயன்படுகிறது?
அ) நியூட்டன் முதல் விதி
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி
இ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஈ) நியூட்டனின் ஈர்ப்பியல் விதி
விடை: ஈ) நியூட்டனின் ஈர்ப்பியல் விதி
5.சமமான விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் நேர்க்கோட்டில் செயல்பட்டால் ----------
அ) Fதொடு=F1+ F2
ஆ) Fதொடு= F2-F1
இ) Fதொடு= F2+ F1
ஈ) Fதொடு= 0
விடை: ஈ) F தொடு-0
1 Comments
Puriyithu nanri
ReplyDelete