TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.
பொதுத்தமிழ் - பகுதி - அ
இலக்கணம்
ONLINE தேர்வு - 4 க்கான விடைப்பகுதி
1 ) பொருத்துதல்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
பகுதி - 4
************* ************** ************
பொருத்துதல்
சொல்லும் பொருளும்.
ஒய்யல் - செலுத்துதல்
ஒருவு - நீங்கு
ஒகரம் - மயில்
ஓரும் - ஆராய்ந்த
ஓரால் - நீக்குதல்
ஒல்கார் - மனம் தளரார்
ஓச்சும் - ஓங்குதல்
ஓய்வு - தளர்வு
ஔவியம் - பொறாமை
ஔடதம் - மருந்து
கவர்ந்து - திருடி
ககபதி - கருடன்
களபம் - யானை
கங்கம் - கழுகு
கஞ்சல் - குப்பை
கபி - குரங்கு
கடு - விஷம்
கடுமீன் - சுறா
கழுகு - பாக்கு
கல் - மலை
கழனி - வயல்
கசடற - குற்றம் இல்லாத
கதம் - சினம்
கரி - சான்று
கனவு - உறங்கும் நிலை
கலம் - கப்பல்
கல்லி - தோண்டி
கடி - விளக்கம்
கடகரி - மதயானை
கதுப்பு - கூந்தல்
கங்குல் - இரவு
கன்மை - சுழி
கழகம் - சங்கம்
கானம் - காடு
கார் - மேகம்
கானல் , கான் - காடு
கிளைஞர் - உறவினர்
கிளர்ந்து - மிகுந்து
கீர்த்தி - புகழ்
கேளிர் - உறவினர்
கேண்மை - நட்பு
கேவிட - வருந்திட
கொல்லை - வீட்டின் பின்புறம்
கொழுநன் - கணவன்
கொற்றம் - வெற்றி
கொற்றவி - அரசி
கொம்பு - மரக்கிளை
கோட்டம் - கோயில்
கோன்மை - அரசாட்சி
கோலம் - அழகு
கோதறு - குற்றம் நீங்கிய.
கோடு - மலையுச்சி
கோதகம் - அரும்பு
குடி - குடும்பம்
குடிமை - குடிப்பிறப்பு
குழல் - கூந்தல்
குருசு - சிலுவை
குருகு - நாரை
**************** ************* ***********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments