ஓவியம் வரையலாம் வாங்க
பகுதி - 46
இயற்கைக் காட்சி வரையலாம் வாங்க
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா ,ஓவிய ஆசிரியை , மதுரை.
************** ************** **********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் கலைநயம் இருக்கிறது.அதை நாம் எவ்வாறு இரசிக்கிறோம் என்பது நம் மனம் சார்ந்தது.அடடா ! எவ்ளோ அழகான காட்சி இது என நாம் வியக்கும் ஒன்று மற்றொருவருக்குப் பிடிக்காமல் கூடப் போகலாம்.
ஆம் ! அது அவரவர் பார்வை . இங்கே அற்புதமான ஓவியத்தை நம் ஓவியர் தந்துள்ளார். இந்த ஓவியம் ஆயிரம் கதைகள் சொல்வதாக நாம் கற்பனை செய்யலாம்.
பூங்காக்களில் இப்படியொரு காட்சியினை நீங்கள் கண்டிருப்பீர்கள். காலாற நடந்து வியர்த்துக் களைத்து வருகையில் மரத்தடியின் கீழே உள்ள கல்பெஞ்சில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடியது நம் நினைவிற்கு வரலாம். இரவுப் பொழுது என்றால் அந்த விளக்கொளியில் நம் அனுபவங்களைப் பகிர்ந்திருப்போம் இல்லையா ? சரி.இப்போ படம் வரையலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்வோம் வாங்க !
************ *************** ***********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments