ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 39
வீடு அழகாக வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
**************** ************* **********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியில் இன்று நாம் வரைய உள்ள ஓவியம் சிரிக்கும் வீடு.
நம்முடைய அடிப்படைத் தேவைகளுள் ஒன்று வீடு. அதை நாம் கனவு இல்லம் என்கிறோம். ஒரு சொந்த வீடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆசை இருக்கும்.
வீடு என்றால் சொர்க்கம் என்பர். வீடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் . அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி , குழந்தைகளுடன் எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறுவயதிலேயே பிள்ளைகள் மனதில் விதைக்கப்பட வேண்டும். பெரியவர்களை வணங்கவும் , மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கற்றுக் கொடுக்கப்பட்டு வளரும் குழந்தைகள் வீட்டையும் , நாட்டையும் பெருமைப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட வீடே சிரிக்கும் வீடு. அதாவது மகிழ்ச்சியான வீடு.
சரி. இப்போது சிரிக்கும் வீடு வரைவோமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
இதோ ... நீங்கள் வரைந்த சிரிக்கும் வீடு !
****************** ************** ********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments