ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 36 - முயல் அழகாக வரைவது எப்படி ? - உங்கள் குழந்தையும் ஓவியரே.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 35

முயல் வரையலாம் வாங்க !

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.


*****************   **************   ***********

வணக்கம் செல்லக் குழந்தைகளே !
          
                   ஓவியம் வரையலாம் வாங்க பகுதியில் இன்று நாம் அழகான முயல் ஒன்று வரைய உள்ளோம். முயல் பாத்திருக்கிங்களா ?  எவ்ளோ அழகா இருக்குது ! முயலைப் பத்தி உங்களுக்கு என்னெல்லாம் தெரியும் ?

                   முயல் கதை தெரியும். முயலும் ஆமையும் ஓட்டப் போட்டியிலே கலந்து ஓடுனாங்க. முயல் , கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போம்னு தூங்குச்சு. ஆமை மெதுவா ஊர்ந்துபோய் எல்லைக் கோட்டைத் தொட்டிருச்சு னு கதைல படிச்சிருக்கோம்.

            அருமை அருமை. அந்தப் போட்டில தோற்றது யாரு ? 

முயல்

அதில் தோற்றது யாருனா , முயலாமை . அதாவது சோம்பேறித்தனமா முயல் முயற்சி செய்யாம இருந்ததுனு சொல்வாங்க. 

            உண்மையிலே முயல் மிக வேகமாக ஓடக்கூடியது. அதோட காதுகள் இரண்டும் பார்க்கப் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அத்தகைய அழகான முயலைத்தான் இன்று நாம் வரைய உள்ளோம். வரைவோமா ?

படம் : 1



படம் : 2




படம் : 3



துள்ளிக் குதித்து ஓடத் தயாரா இருக்குது.





Post a Comment

0 Comments