ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 31
நெற்கதிர் அழகாக வரையலாம் !
வழங்குபவர் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
*************** ************** ************
வணக்கம் சின்னக் கண்மணிகளே !
இன்று நாம் வரையப் போகும் அற்புதமான ஓவியம் நெல்மணிகள். பூமிப் பந்தில் உள்ள மனிதர்களை இயக்கும் அற்புத ஆற்றல் படைத்தவன் விவசாயி என்னும் ஆண்டவன். அவன் சேற்றில் கால் வைப்பதால் நாம் சோற்றில் கை வைத்து சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பத்து விரல்களால் பாடுபட்டு நாம் ஐந்து விரல்களால் அள்ளி உண்ணும் அன்னம்தான் நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.
நம் தமிழகத்தில்தான் 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகள் இருந்தன. இன்றும் சில அரிய நெல்வகைகளை நம் விவசாயிகள் பயிர்செய்து வருகிறார்கள். நெல் ஜெயராமன் என்ற வணங்கத்தக்க விவசாயி ஒருவர் நம் பாரம்பரிய நெல்வகைகளைச் சேகரித்து நமக்குப் பெருமை சேர்த்தார்.
நம் தாத்தா வேளாண்விஞ்ஞானி பெரியாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயத்தில் மாபெரும் புரட்சி செய்தார்.
இன்று நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு நெல் எதிலிருந்து கிடைக்கிறது என்பது தெரியாது.அவர்கள் மரத்தில் இருந்து கிடைக்கிறது என்பார்கள்.
நெல்மணிகள் கொத்துக்கொத்தாய் வயலில் விளைந்து தொங்கும் காட்சிகளைக்காண கோடிக்கண்கள் வேண்டும். திரைக்கவித்திலகம் மருதகாசி அவர்களின் பாடல் வரிகள் நினைவிற்கு வரலாம்.
சரி. இப்போது ஓவியம் தீட்டலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
இதோ ... நெல்மணிகள்
நம் பாரம்பரிய நெல்வகைகளைக் காண்போமா ?
************* ************* ************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments