வகுப்பு - 10 , தமிழ் - இயல் 3
விருந்து போற்றுதும் - நெடுவினா - 3
*********** *************** ************
3 ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
தமிழரின் பண்பாடுகளுள் முக்கியமானது விருந்தோம்பல். இல்லறக் கடைமைகளில் தலையாயது விருந்து உபசரிப்பதாகும். இதன் அவசியத்தை வலியுறுத்தவே வள்ளுவப் பெருந்தகை விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். விருந்தினர் விரும்புவது முகமலர்ச்சியுடன் கூடிய அன்பைத்தான் செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர்நோக்கி இருக்கும் தமிழினம் நம் இனம்.
அத்தமிழினத்தில் தோன்றிய தமிழர் நாங்கள். எங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தினரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களுடன் இணைந்து இனிமையான தருணங்களை நினைவுகளாக்க நானும் எங்கள் குடும்பத்தினரும் எவ்வாறு உபசரித்தோம் என்பதைக் காண்போம்.
மதுரையைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பரும் அவருடைய குழந்தைகளும் சென்னையில் உள்ள எங்கள் இல்லத்திற்குக் கோடை விடுமுறையைக் கொண்டாட வந்திருந்தனர். அவர்கள் தொடர்வண்டியில் வந்து இறங்கி அந்நேரத்திலிருந்து எங்கள் விருப்பம் என்று எதையும் நினைக்காமல் அவர்களின் விருப்பமே எங்கள் விருப்பமாயிற்று.
ஒவ்வொரு பொழுதும் புதிதாய்க் கடந்தது. ஒவ்வொரு வேளையும் அவர்களின் குறிப்பறிந்து, விருப்பத்திற்கேற்ப உணவுகளைச் சமைத்து அருகிலிருந்து அன்போடு பரிமாறினோம். வெளியே செல்லும் வேளைகளில் கட்டுச்சோறு கட்டிச் சென்று பழைமையைப் புதுப்பித்தோம். அவர்கள் உறங்கிய பின் உறங்கி அவர்கள் எழும் முன் எழுந்து அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தோம்.
அவர்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம் விருந்தினரின் விருப்பத்தை நிறைவேற்றவேகாத்திருந்தோம். புத்தாடைகள், புதுவகையான உணவுகள், புதுவகையானவிளையாட்டுகள். புதுப்புது இடங்கள் என அனைத்தும் புதுமையாய் இருந்தது. ஆனால் பழங்கதைகள் மட்டும் பழைமை மாறாமல் பேசிச் சுவைத்தோம்.
இவையனைத்தும் எங்கள் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீதுள்ள பற்றின் புரிதலைத் தந்தது. விருந்துண்டு,நல் அனுபவம் கொண்டு மகிழ்ந்த அவர்கள் மீண்டும் இத்தகு நாள் கிடைக்கப் பெறுமா? என நினைத்த வண்ணமே ஊர் சென்று சேர்ந்ததாகக் கூறினர். தமிழரின் பண்பாடு பாதுகாக்கப்பட்டவை எண்ணி மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments