பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - பண்பாடு - திறன் அறிவோம் - பாடப்பகுதி சிறுவினா - வினாக்களும் விடைகளும் / 10 TAMIL - EYAL 3 - THIRAN ARIVOM - SMALL QUESTION & ANSWERS

 

                     வகுப்பு - 10 , தமிழ்

                      இயல் 3 - பண்பாடு

சிறுவினா - வினாக்களும் விடைகளும்




**************    *************    ************


சிறுவினா

1. ) ' கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு!

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' - இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

(i) கண்ணே கண்ணுறங்கு! - விளித்தொடர்

(ii) காலையில் நீயெழும்பு - வேற்றுமைத்தொடர்

(ii) மாமழை பெய்கையிலே - உரிச்சொல்

(iv) மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்

(v) பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத்தொடர்

(vi) ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத் தொடர்

-------------------     -------------------   --------------   ----------

2 ) முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

(i) முல்லை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவு வகை : வரகு, சாமை.

(ii) மருத நிலத்திலிருந்து கிடைக்கும் உணவு வகை : செந்நெல், வெண்ணெல்.

-----------------------     -----------------------   -----------------

3 ) புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

* புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் முன்னோர்.

* இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை. அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை.

* இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.

* முன்னர் திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்லவிழா நாள்களில் அப்பகுதி வாழ் மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.

* காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக் கூடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து
வழியனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.

* பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் மேற்கூறிய முறைகளில் பின்பற்றப்படுகின்றது.

---------------------     ---------------------   ---------------------

4 ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

கூத்தரைக் கூத்தர் ஆற்றுப்படுத்தியது :

(i) பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குகள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும்
பூங்கொத்துகளை சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்.

(ii) அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.

(iii) அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.

(iv) அதன் பிறகு நீங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த
உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.

(v) அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."
என்பவையாகும்.

*****************     ***************  *********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments