ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 25 - அழகாகக் குருவி வரைவது எப்படி ? - குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 25

 ( வெள்ளிப் பதிவு - இது வெற்றிப் பதிவு )

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , 

ஓவிய ஆசிரியை , மதுரை.


*************    ************       **************


************    *************    *************

        வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! தொடர் தொடங்கி இன்றுடன் வெற்றி கரமாக 25 நாட்கள் ஆகின்றன. ஏதோ விளையாட்டாகத் தொடங்கிய இத்தொடர் இன்று பல குழந்தைகள் தினமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வெற்றித் தொடராக அமைந்து விட்டது. அதற்கு இருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.ஒருவர் நம் அன்பிற்கினிய ஓவியர் திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா அவர்கள். மற்றொருவர் இப்பதிவைப் பார்த்துக் கொண்டிருக்கும் அன்பிற்குரிய நீங்கள்

                     வண்ணத்துப் பூச்சியாயப் பறந்து , சின்னக்குருவியாய்ச் சிறகசைத்து இன்று 25 நாளைத் தொட்டிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் தொடங்கிய நாள் முதல் இடையறாது வந்திருப்பதுதான். பல்வேறு பணிகளுக்கிடையேயும் நமது ஓவியர் தொடர்ந்து அனுப்பி வைத்து நம்மை ஆச்சர்யப் பட வைத்துள்ளார். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

                சிறகு விரித்துப் பறக்கும் குருவிகளைக் கண்டாலே நமக்குப் பேரின்பம்தானே ! அதனால்தானே மாகவிஞன் பாரதி , 

' விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக் குருவியைப் போல ' 

         எனப்பாடினான். சிட்டுக்குருவியை விடுதலைக்கான குறியீடாக வைத்தான். இன்றும் எத்தனையோ பேர் வீட்டில் குருவிகள் உரிமையோடு கூடு கட்டி குடும்பமாக வாழ்ந்து வருவதை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய சிறப்பு மிக்க குருவிதான் இன்றைய ஓவியம் வரையலாம் வாங்க பகுதியில் இடம்பெறுகிறது.

            சரி. குருவி எப்படி வரையலாம்னு ஒவ்வொரு படி நிலையாகக் காண்போமா ?

படம் : 1



படம் : 2 




படம் : 3



இதோ சிறகு விரிக்கும் சின்னக்குருவி



வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************   ****************  ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* **********

Post a Comment

0 Comments