பத்தாம் வகுப்பு - தமிழ் - அலகுத்தேர்வு - தருமபுரி மாவட்டம் - ஜூலை 2021 / 10 TAMIL - UNIT TEST - DHARMAPURI - JULY - 2021

 

             பத்தாம் வகுப்பு - தமிழ் 

அலகுத்தேர்வு - தருமபுரி - ஜூலை - 2021 




***************    **************    ************


அலகுத் தேர்வு-1

செய்யுள் , உரைநடை , இலக்கணம்

பகுதி-1 (மதிப்பெண்கள் 6)

குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையையும் சேர்த்து எழுதவும்.

1.பொருத்துக

1. இலை       - i )முத்து

2 கொழுந்து- ii) தாள்

3. பூ-                  iii ) குருத்து

4. மணிவகை- iv )அரும்பு

அ) {1} -ii {2}-iii (3}-iv {4]-i: 

ஆ) (1] -iii  [2]-iv {3} ii  {4} i 

இ] [1) -ii {2}-iv [3}-iii {4}-iv

ஈ') {1} - ii  {2}-iv  (3}-i {4}-iv

2.உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

அ) இந்தியா 

ஆ) மலேசியா 

இ) நேபாளம் 

ஈ) இலங்கை

3. சந்தக்கவிமணி என அழைக்கப்படுபவர் யார் ?

அ பாரதியார்      ஆ)பாரதிதாசன் 

இ) கம்பார்            ஈ) தமிழழகனார்

4. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது

அ) நிலை மொழி ஆ ) பொது மொழி 

இ)தனிமொழி ஈ) தொடர்மொழி

5. வேர்க்கடலை , மிளகாய் விதை ,  மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர்வகை

அ) குலை வகை ஆ) மணி வகை 

இ) கொழுந்து வகை ஈ )இலை வகை

6. சொல்லிசை அளபெடை எடுத்துக்காட்டு

அ) உரனசைஇ        ஆ) ஓஓதல் 

இ) உறாஅர்                ஈ) எடுப்பதூஉம்


பகுதி 2 (மதிப்பெண்கள் - 10)

(எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்)

7. இளம் பயிர் வகை நான்கின் பெயர்களை எழுதுக.

8. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?

9.. முத்தமிழ் , முச்சங்கம் இவற்றை விரித்து எழுதுக

10. மூவகை மொழிகள் யாவை ?

11. ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன இத்தொடரை பிழை நீக்கி எழுதுக.

12. மன்னும் சிலம்பே மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே 

- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
காப்பியங்களை தவிரஎஞ்சியுள்ள ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

13. தரிசு, புறம்போக்கு ,  முரம்பு- இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிய பெயர்க்
காரணத்தை எழுதுக.


பகுதி 3 (மதிப்பெண்கள்-9)

( எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும் 18 ஆவது
வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)

14. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை
விளக்குக.

15 தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன
யாவை?

16. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்- 

இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின்
வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

17. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு எடுத்துக்காட்டு தந்து
விளக்குக.

18. "அன்னை மொழியே” என தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
பாடலை அடி மாறாமல் எழுதுக.


பகுதி-4 (மதிப்பெண்கள் - 15)

(எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடை அளிக்கவும் )

19. மொழி அல்லது நாட்டின் சிறப்புகளைப் பாடும் கவிதை ஒன்றை எழுதுக.

(அல்லது)

தமிழ் மொழி நவீன தொழில்நுட்பத்திற்கு மேம்பட நீ என்னென்ன புதுமைகள்
மேற்கொள்வாய் என்று ஐந்து கருத்துக்களை எழுதுக.

20.தொழில் பெயர் என்றால் என்ன ? அதன் வகைகளை விளக்கி எழுதுக.

(அல்லது)

மூவகை மொழிகளை விளக்கி எழுதுக.

21. உரைப் பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக
அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு வணிகத்துக்கு படிப்புக்கு
என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின்
முகபாவனைகளில் இலிருந்து உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன. பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும்
வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன் படுத்துகிறார்கள்.

அ) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர்
என்ன?

ஆ) உலக அளவில் எத்தனை வகை ரோபோக்கள் உள்ளன?

இ) ரோபோக்கள் மனிதரின் உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்கின்றன?

ஈ) ரோபோ எங்கெல்லாம் பயன்படுகின்றன?

உ) ரோபோ தொடர்பாக நீ கண்ட திரைப்படத்தின் பெயரை எழுதுக.

21.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக




பகுதி-5 (மதிப்பெண்கள்-10 )

(அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும்)

19. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

(அல்லது)

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

20 ) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

(அல்லது)

இணையத்தமிழனும் சங்கத்தமிழனும் ஏதேனும் ஒரு நேரலை ( Online ) வகுப்பில்
கலந்துகொண்டு உரையாடுவதுபோல உன் சொந்த கற்பனையில் எழுதுக
(எடுத்துக்காட்டு: வாட்சப் உரையாடல், ஜும் உரையாடல் , கூகுள் மீட் உரையாடல் )

**************      **************     **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********


Post a Comment

0 Comments