ஆறாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2
பயிற்சித்தாள் - 9
வாழ்வியல் - திருக்குறள்
*********** *************** *************
1. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாதது எது?
அ) தெய்வப்புலவர்
ஆ) வான்புகழ் வள்ளுவர்
இ ) பாவேந்தர்
ஈ) பொய்யில் புலவர்
விடை: இ. பாவேந்தர்
2. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் -------- -- ஆகும்.
அ) 1330
ஆ) 1300
இ ) 10
ஈ ) 133
விடை: ஈ ) 133
3. திருக்குறளில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை --------- ஆகும்.
அ) 133
ஆ 1330
இ ) 1300
ஈ) 10
விடை : ஆ. 1330
4. திருக்குறள் --------- நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) எட்டுத்தொகை
இ) பத்துப்பாட்டு
ஈ ) ஐம்பெருங்காப்பியம்
விடை: அ. பதினெண்கீழ்க்கணக்கு
5. குறளைப் படித்து வினாவிற்கு விடையளிக்க.
குறள் : கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொருள் : உரியகாலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
வினா
மழையின் இயல்புகள் யாவை?
விடை: உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும், உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழையின் இயல்புகள் ஆகும்.
6. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
இக்குறளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்தெழுதுக.
விடை: அகர , பகவன் - க - எதுகை
7. கோடிட்ட இடங்களை நிரப்புக.
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்".
பொருள் : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.
அ) முடியாத செயலையும் செய்து முடிப்பவர் பெரியோர் ஆவார்.
ஆ) சிறிய வேலையைக் கூட கண்டு அஞ்சுபவர் சிறியோர். ஆவார்.
8 ) குறளைப் படித்து வினாவிற்கு விடையளிக்க.
குறள் : அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள் : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும்தான்.
வினா
குறளின்படி தீயவன் ஒருவனின் உடல் எப்படிப்பட்டது?
விடை: தீயவனின் உடல் எலும்பும் தோலும் நிறைந்தது.
9. கீழ்க்காணும் குறளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்தெழுதுக.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று".
விடை: இனிய , இன்னாத - இ - மோனை
10. குறிப்புகளைப் படித்துப் பார்த்து, கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானவற்றைத் தெரிவு செய்து குறுக்கெழுத்துப் புதிரை நிரப்புக.
இடமிருந்து வலம்
1) திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்
2) இது இருப்பதுதான் உயிருள்ள உடல் - அன்பு
மேலிருந்து கீழ்
3) மிகச் சிறந்த அணிகளுள் ஒன்று -
இன்சொல்
4) எழுத்துகளுக்குத் தொடக்கம் - அகரம்
வலமிருந்து இடம்
5) உரிய காலத்தில் பெய்து காப்பது -
மழை
6) திருக்குறளின் சிறப்புப் பெயர் - வாயுறை வாழ்த்து
கீழிருந்து மேல்
7) முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் - பெரியோர்
8) இது இருக்கும்போது காயை உண்ணக்கூடாது - கனி
************* ************ ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments