ஆறாம் வகுப்பு - அறிவியல் - பருவம் 2 - பயிற்சித்தாள் - 8 - அலகு 2 - மின்னியல் / 6 SCIENCE - WORKSHEET 8 - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - அறிவியல் 

பருவம் - 2

பயிற்சித்தாள் - 8 

அலகு - 2 , மின்னியல் 



*************   ****************   ************


1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சோலார் பேனல்களில் என்ன வகையான ஆற்றல் மாற்றம் நடைபெறுகிறது.

அ. மின்னாற்றலிலிருந்து இயக்க ஆற்றல்

ஆ. அணுசக்தி ஆற்றலிலிருந்து மின் ஆற்றல்

இ. மின்னாற்றலிலிருந்து வேதி ஆற்றல்

ஈ) சூரிய ஆற்றலிலிருந்து மின்ஆற்றல் 

 விடை : 

ஈ) சூரிய ஆற்றலிலிருந்து மின்ஆற்றல் 


2. உங்கள் வீட்டில் உள்ள எந்த உபகரணம் மின்சாரத்தில் இயங்காது?

அ. குளுரூட்டி

ஆ. தொலைக்காட்சி

இ.) எரிவாயு அடுப்பு

விடை : இ) எரிவாயு அடுப்பு

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை அடையாளம் காணவும்.

அ. தொலைக்காட்சி ரிமோட்டுகளில் மின்கலன் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. அனைத்து மின்கலனும் ரீசார்ஜ் செய்யக்கூடியவை.

(இ.) ஒருமின்கலன் சிறிய அளவிலான மின்சார சக்தியை உருவாக்குகிறது. '

ஈ. ஒருமின்கலன்ஒருதளத்தின் அதே அளவிலானமின்சக்தியை உருவாக்குகிறது.

விடை :  இ.) ஒருமின்கலன் சிறிய அளவிலான மின்சார சக்தியை உருவாக்குகிறது. 

4. ஒரு மின் விளக்கு வழியாக மின்னோட்டம் செல்லும் போது -----------ஆற்றல் உருவாகிறது.

அ. வெப்ப

ஆ. ஒளி

இ வெப்பமற்றும் ஒளி

ஈ . வேதி 

விடை : இ). வெப்பமற்றும் ஒளி


5. பின்வரும் எந்தக்குழு கடத்தி மற்றும் கடத்தாப்பொருள் இரண்டையும் கொண்டுள்ளது?

அ. செம்பு, வெள்ளி, அலுமினியம்

ஆ. கடல்நீர்,தாமிரம், வெள்ளி

இ.) அலுமினியம்,ரப்பர், தாமிரம் 

ஈ. தாமிரம்,கிராஃபைட், வெள்ளி

விடை - இ ) அலுமினியம்,ரப்பர், தாமிரம் 

6. மைக்கேல் பாரடே எப்போது மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்தார்?

அ.) 1821 

ஆ. 1822

இ. 1823

ஈ. 1824

விடை: அ. 1821


7. தமிழ்நாட்டில் உள்ள மின்நிலையங்களின் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வகையை அடையாளம் கண்டு படங்களுடன் பொருத்தவும்.

விடைகள்

அ ) காற்றாலை  -   கயத்தாறு

ஆ ) நீர்மின் நிலையம் - மேட்டூர்

இ ) அனல்மின் நிலையம் - நெய்வேலி

ஈ ) அணுமின் நிலையம் - கல்பாக்கம்


II. அடைப்புக்குறிக்குள் உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுத்து நிரப்பவும்.

மின் ஆற்றல்  மின்கலத்தில் உள்ள வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

(ஒளிஆற்றல், வேதி ஆற்றல், மின்ஆற்றல்)

IIL கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியா? தவறா? தவறு என்றால் சரியான காரணத்தைக் கூறவும்.

9. ஒருடார்ச் விளக்கில் ஒளி ஆற்றல் வேதிஆற்றலாக மாற்றப்பட்டு பின் ஒளி ஆற்றலாக மாற்றமடைகிறது.

            தவறு. ஒரு டார்ச் விளக்கில் வேதி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு, பின் ஒளி ஆற்றலாக மாற்றப்படுகிறது.

10. மின்சாரவிளக்குகளில்டங்ஸ்டன் இழை பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இது மின்கடத்தாப் பொருள்.

                  தவறு. மின்சார விளக்குகளில் டங்ஸ்டன் இழை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது அதிக மின்கடத்துதிறன் மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.

***********   *************    **************

விடை தயாரிப்பு :

திருமதி.கு.சுமதி , அறிவியல் ஆசிரியை , 

ஊ.ஒ.ந.நி.பள்ளி , அவ்வையார்

 பாளையம் ,  கோபி , ஈரோடு.

*************   ************    *************


வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    ********

Post a Comment

0 Comments