வகுப்பு - 6
பாடம் - அறிவியல்
பருவம் - 2 , பயிற்சித்தாள் - 11 , செல்
*********** ************** **************
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழ்காணும் செல்நுண்ணுறுப்புகளில் எவை தாவர செல்லில் மட்டும் காணப்படும் ?விலங்கு செல்லில் காணப்படாது?
அ. உட்கரு மற்றும் செல் சவ்வு
ஆ. செல் சுவர் மற்றும்பசுங்கணிகம்
இ. சைட்டோபிளாசம் மற்றும் செல் சுவர்
ஈ. செல் சவ்வு மற்றும் பசுங்கணிகம்
விடை : ஆ ) செல்சுவர் மற்றும் பசுங்கணிகம்
2. உயிரியின் மிக சிறிய அலகு.
ஆ அணு,
ஆ. மூலக்கூறு
இ) செல்
ஈ ) செல் நுண்ணுறுப்பு
விடை : இ ) செல்
3. வெளிப்புறம் இருந்து உட்புறமாக சரியாக வரிசைப் படுத்தப்பட்ட தாவரசெல்லின் அமைப்பினைதெரிவுசெய்க.
அ செல் சுவர், உட்கரு , எண்டோபிளாஸவலைப்பின்னல், செல்சவ்வு
ஆ. செல் சவ்வு, செல் சுவர், உட்கரு, எண்டோபிளாஸவலைப்பின்னல்,
இ. செல் சுவர், எண்டோபிளாஸ வலைப்பின்னல், செல்சவ்வு, உட்கரு
ஈ) செல் சுவர், செல்சவ்வு, எண்டோபிளாஸவலைப்பின்னல், உட்கரு
விடை : அ
4. ராணி, செல் சுவர்,செல் சவ்வு, உட்கரு,பச்சையம் ஆகியவற்றை உள்ளடக்கியமாதிரி ஒன்றை நுண்ணோக்கியில் உற்று நோக்குகிறாள். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து அம்மாதிரி எதுவென்று தெரிவுச் செய்க.
அ. விலங்கு செல்
ஆ. பாக்டீரியா
இ. காளான்
ஈ ) வேப்பமர இலை
விடை : ஈ ) வேப்பமர இலை
II. சுருக்கமாக விடையளி:
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்று நோக்கி மனிதர்களின் கண்களால்
நேரடியாகப் பார்க்க இயலாத ஒரு பொருளின் நுண்ணிய பகுதியைப் பார்க்கபயன்படும்
கருவியைக்கண்டறிந்து அதன் பெயரைஎழுதவும்.
விடை: கூட்டு நுண்ணோக்கி
6. விடுகதைக்கு விடை எழுதுக.
நான் யார்?
1. என்னை செல்லின்ஆதரவாளன் அல்லது பாதுகாவலன் என அழைப்பர் .நான்
செல்லை விறைப்பாகவும் உறுதியாகவும் ஆக்குவேன்.
விடை : செல் சுவர்
2. நான் பச்சை நிறத்தில் இருப்பேன்.தாவர செல்லின் உணவு உற்பத்தியாளன்.
விலங்கு செல்லில் காணப்படுவதில்லை.
விடை : பசுங்கணிகம்
3. நான் தாவர செல்லின் மிகப்பெரிய சேமிப்பு உறுப்பாவேன். விலங்கு செல்லில் மிக
சிறிய மற்றும் கழிவு நீக்கும் உறுப்பாவேன்.
விடை : நுண் குமிழ்கள்
7. கீழ்காணும் வினாக்களுக்குகாரணம்கூறுக.
செல் சுவர் ஏன் தாவர செல்லில் மட்டும் காணப்படுகிறது, விலங்கு செல்லில்
காணப்படுவதில்லை?
செல்சுவர் கடினத்தன்மை வாய்ந்தது. தாவரத்திற்கு உறுதி மற்றும் வல்லமை தருகிறது. விலங்கு செல் கடினத்தன்மை அற்றது. எனவே, செல் சுவர்
காணப் படுவதில்லை.
2. பசுங்கணிகம் தாவர செல்லில் மட்டும் காணப்படுகிறது.காரணம்கூறுக.
தாவரங்கள் உணவு தயாரிப்பதற்கான ஒளிச்சேர்க்கை
நிகழ்வு நடைபெற பசுங்கணிகம் தேவை.
8. கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குரிய சரியான சொல்லைக் / பதத்தைக் கண்டறிந்து எழுதவும்.
1.செல்லைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.
செல் உயிரியல்
2. நியூக்ளியார் சவ்வினால் சூழப்பட்ட உண்மையான உட்கரு கொண்ட செல்.
யூகேரியாடிச் செல்
3. உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு.
செல்
4.லத்தின் மொழியில் 'செல்லுலா' என்பதன் பொருள்.
சிறிய அறை
10. கீழே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுறுப்புகள் எந்த செல்லில் காணப்படும் என்பதைக் கட்டத்தில் குறிக்கவும், மேலும் கொடுக்கப்பட்டுள்ள
வினாக்களுக்கு விடையளிக்கவும்.
நுண்ணுறுப்பு - தாவரசெல் - விலங்கு செல்
செல் சுவர் உண்டு இல்லை
செல் சவ்வு இல்லை உண்டு
சைட்டோபிளாசம் உண்டு இல்லை
பசுங்கணிகம் உண்டு இல்லை
மைட்டோகாண்ட்ரியா உண்டு உண்டு
உட்கரு உண்டு உண்டு
நுண்குமிழ் உண்டு உண்டு
சென்டிரியோல் இல்லை உண்டு
எண்டோபிளாஸ
வலைப்பின்னல் உண்டு உண்டு
அ) விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் செல் நுண்ணுறுப்புகளின் பெயர்களை
எழுதுக.
சென்டிரியோல்
ஆ) தாவர மற்றும் விலங்கு செல் நுண்குமிழ்களுக்கு இடையேயான வேறுபாடு
ஒன்றை தருக.
தாவர செல் : நுண்குமிழ்கள் அளவில் பெரியது. உணவு, நீர் மற்றும் வேறு பொருள்களைச் சேமிக்கிறது.
விலங்கு செல் ; நுண்குமிழ்கள் அளவில் சிறியவை,
************** ************ ***********
விடை தயாரிப்பு :
திருமதி.கு.சுமதி , அறிவியல் ஆசிரியை ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி , அவ்வையார்
பாளையம் , கோபி , ஈரோடு.
************* ************ *************
வாழ்த்துகள் நண்பர்களே !
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
********* ************* *******
0 Comments