நிறவெறியை எதிர்த்து வெற்றி கண்ட நிகரிலாத் தலைவர் நெல்சன் மண்டேலா - பிறந்த தினம் ( 18 - 07 - 2021 ) சிறப்புப் பதிவு.

 

நிறத்தை மனத்தால் வென்ற மாமனிதரின்

மகத்தான வாழ்க்கை வரலாறு.

நெல்சன் மண்டேலா பிறந்த தினம் 

          ( 18 - 07 - 2021 )  - சிறப்புப் பதிவு




****************      *************    ***********

வரலாறு , வந்தவர்களைத் தன் தோளில் சுமப்பதில்லை. வடுக்களைச் சுமந்து , வாழ்க்கையில் சாதனை தந்தவர்களை மட்டுமே தன் உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது.

               சரித்திரம் படைத்த அத்தகைய சாதனையாளர்கள் வரலாற்றில் இடம்பிடித்து , நம் வாழ்க்கையிலும் தடம் பதிக்கிறார்கள். கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறையிலே கால்கட்டோடு இருந்தாலும் , தான் கொண்ட கொள்கையில் தடம் மாறாது இருந்த மகத்தான தலைவன். நூற்றாண்டைக் கடந்தும் அவரை நாம் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதுதான் அவரது சாதனை.

               உலகெங்கும் வெறி பிடித்து அலைந்து திரிந்தது நிறம். கருப்பர் , வெள்ளையர் என்ற பாகுபாடு , பாகுபாடில்லாமல் அனைத்துத் தேசங்களிலும் தேசாந்திரியாகத் திரிந்தது. சிறையில் இருந்து மீண்டுவந்த ஒரு சரித்திர நாயகனின் சாதனைகளைக் காண்போம்.


                       18 - 7 - 2021

சர்வதேச  நெல்சன் மண்டேலா  தினம்.

       2018 ஆம் ஆண்டின் சர்வதேச  மண்டேலா தினமானது  நெல்சன் மண்டேலாவின்  100 - வது  பிறந்த தின த்தைக் குறிக்கிறது .

நெல்சன் மண்டேலா தினம் 2009 - ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் ஐ .நா - வால்  அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப் பட்டது.

முதன் முறையாக  2010 - ஆம் ஆண்டு ஜுலை  18 - ஆம் நாள் அனுசரிக்கப் பட்டது.

" பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா

செய் தொழில் வேற்றுமையான்."

                                           - திருக்குறள் -


      மதங்களோ, நிறங்களோ  உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என நிர்ணயப்பதில்லை அவரவர்  செய்கைகளே அவர்களை உயர்ந்த வும்  தாழ்த்தவும் செய்கிறது.


அடிமை விலங்கை உடைத்து

அறத்தை நிலையாக்கி 

இழிவெனச் சிறுமைப்படுத்தி ஒதுக்கப்பட்ட 

மக்களின் குரலாக 

அவர்களின் எதிர்கால  நிழலாக 

கிடைத்த சந்தர்ப்பத்தைச்  சாதகமாக்கி 

அடிமை செய்தவனை அதிர வைத்து

வெள்ளையனை வேரறுத்து

உலகத்தைத் தன்பக்கம் திருப்பி

உரிமையைப் பெற்ற வேங்கை  அவர் தான் மண்டேலா!

      தேச பக்தர் , இனக்காவலர் , சட்டவல்லுநர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன் , அதிபர் என பன்முக திறன் கொண்டவர் மண்டேலா.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்க  அரும்பாடுபட்டார் என்றால் மிகையல்ல.

       நெல்சன்  மண்டேலா - 1918 - ஆம் ஆண்டு ஜுலை 18 - ஆம் நாள்  தென்னாப்பிரிக்காவில் உள்ள " குலு " என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை  சோசா  பழங்குடி மக்களின் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள் , 13 - பிள்ளைகள் . மூன்றாம்  மனைவியின் பிள்ளையே  மண்டேலா . "நெல்சன் ரோலிக்லாலா மண்டேலா " இதுவே அவரது முழுப்பெயர். ரோலிக்லாலா என்பதன் பொருள் தொல்லைகள் கொடுப்பவன் என்பதாகும்.இவற்றிற்கேற்ப இனவெறி கொண்ட வெள்ளையனுக்கு தொல்லைகள் பல தந்து விரட்டியடித்து வெற்றி கண்டார்.

இளமைக் காலம்.

              இவரது குடும்பத்தில் முதன் முதலில் பள்ளிக்குச் சென்றவர்  இவரே. இளம் வயதில் ஆடு மாடுகளை  மேய்த்துக் கொண்டே  பள்ளிக்கூடத்தில் படித்தார் . போர் புரியும் கலைகளையும்  அறிந்திருந்தார்.சிறு வயதில் குத்துச் சண்டை வீரராக  அறியப்பட்டார். 


நெல்சன் மண்டேலாவின் பெயரின் முன் உள்ள  " நெல்சன் " என்பது இவர் பயின்ற  முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்ட து .கல்வியறிவைப் பெறுவதில்  பெரும் நாட்டம் கொண்டிருந்தார் மண்டேலா.

   லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலை க்கழகங்களில் பட்டப் படிப்பை படித்தார். 1941 - ல் ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக் கல்வியைப் படித்தார்.

ஆப்பிரிக்க  தேசிய  காங்கிரஸில் ஈடுபாடு.

           ஒடுக்குமுறையை எதிர்க்க  மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக  ஈடுபட்டார். இதன் காரணமாக அவரது முதல் மனைவியுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால்  மனைவியைப்  பிரிந்தார். பின் 1958 - ஆம் ஆண்டு ' வின்னி  மடிகிலேனா ' என்பவரை மணந்தார்.வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப்  போராடி வந்தார்.

அறப்போராட்டங்கள்  மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கச் செய்தார் மண்டேலா. நாடுமுழுவதும்  பயணித்து இன அடிப்படையிலான  ஒடுக்கு முறைகளை எதிர்த்துப்  பிரசாரம் செய்தார். அமைதியான  வழியில் எதிர்ப்பைத்  தெரிவிப்பதே  மண்டேலாவின் நோக்கமாக  இருந்தது. இதனால் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்தின்  விசாரணையிலும் அமைதியான வழியில் மக்களைத் திரட்டி  போராடினார். ஆனாலும் கம்யூனிஸ்ட்களை அடக்கி ஒடுக்கும் சட்டத்தை எதிர்த்ததாக மண்டேலா மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. மண்டேலாவின் தண்டனை தளர்த்தப்பட்டது.பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.

சோதனையே சாதனையாக.

   ஆறுமாத  தடையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி,தன்னுடைய சட்டப் படிப்பை முடித்தார்.அதோடு அல்லாமல் வழக்கறிஞர் பணிக்கான அனுமதியையும் பெற்றார்.ஆலிவர் பாம்போ என்பவருடன் இணைந்து ஜோகன்னஸ் பெர்க்கில்  வழக்கறிஞர் பணியிலும் ஈடுபட்டார்.

வீரமுழக்கம் 

     ஆங்கிலேய  அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்த மண்டேலா  1950 -ல் பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

   " ஆங்கிலேயர் மட்டும் அங்கம் வகிக்கும் நீதிமன்றம் தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது " என அறிவித்தார்.

இனவாத த்தை  நான் வெறுக்கிறேன் . எந்த  இனத்திடமிருத்து தோன்றினாலும் இனவாதம் காட்டு மிராண்டித்தனமானதே " என நீதிமன்றத்தில் முழங்கினார் மண்டேலா.

சிறைவாசம்

     மண்டேலா 1962 - ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஏறத்தாழ 27 - ஆண்டுகள்சிறையில் இருந்தார். உலக  வரலாற்றிலேயே  இதுவரை இவரைப்போல  நீண்ட  காலம் சிறையில் இன்னல் பட்ட தலைவர்கள் இல்லை. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசு. மனைவியைச் சந்திப்பதற்குக்  கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 - ஆம் ஆண்டு கடுமையான காசநோய் ஏற்பட்டதால் வீட்டுச் சிறைக்கு மாற்ற ப்பட்டார்.

விடுதலை அறிவிப்பு.

    தென்னாப்பிரிக்க  அரசு , தலைவரான டெக்ளார்க் பிரெட்ரிக் வில்லியம்  என்பவர் .ஆப்பிரிக்க தேசிய  காங்கிரஸ் மீதான தடையை நீக்கி,மண்டேலா 11- 2 - 1990 - அன்று விடுதலை செய்யப்படுவார் என அறிவித்தார் . அவ்வாறே 1990 - ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். அப்போது அவருக்கு வயது - 71  இந்த நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக  தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட து . 

 இந்தியாவின்  பங்கு.

    விடுதலை செய்யப்பட்ட மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக  பிரதமர் வி. பி. சிங்  தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

மண்டேலாவை அவர் மனைவி வின்னி சிறையிலிருந்து வெளியே அழைத்துவந்தார். 

      சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும்,மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

    மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர்.இந்நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் நேரடியாக தொலைக் காட்சியில்  ஒளிபரப்பப்பட்ட து.

அதிபர் மண்டேலா.

     1984 - ம் ஆண்டு மே - 10 - ம் நாள் தென்னாப்பிரிக்கா வின் அதிபர் ஆனார் மண்டேலா. அதிபர் ஆனவுடன் - 1998 - ம் ஆண்டு பள்ளிகளில் தமிழ்,தெலுங்கு,இந்தி,குஜராத்தி,உருது ஆகிய  மொழிகளைக் கற்க ஏற்பாடு செய்தார். 

வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களும்,  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்களும் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். உயர்ந்த பரிசான நோபல் பரிசைப் பெற்றார். 

அணிசெய்த விருதுகள்.

   1993 - ஆம் ஆண்டு அவருக்கு "நோபல்" பரிசு  வழங்கப் பட்டது. 1990 - ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய  விருதான  " பாரத ரத்னா " வழங்கப்பட்டது. 1992 - ஆம் ஆண்டு " நிஷானிய " பாகிஸ்தான் விருதும் வழங்கி  கெளரவிக்கப் பட்டது. 

இனவெறியும் , அணுஆயுதங்களும் அற்ற அமைதி நிலவும் உன்னத உலகைக் காண விழைந்த தலைவரின் கனவுகள் மெய்ப்பட  நாளும் பாடுபடுவதே அவருக்காற்றும் நன்றி ஆகும்.


" சுதந்திர  பயிருக்கு நீரானவர் " இன்று 

 " வையத்துள்  வாழ்வாங்கு வாழ்ந்து  வானுறையும்  தெய்வமாகத்  திகழ்கிறார்.


****************     *************    **********


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

1 Comments

  1. அருமையான தகவல்கள். அருமை அருமை. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete