கர்மவீரர் காமராசர் வாழ்வில் நடந்த
அற்புதமான அரிய நிகழ்வுகள்.
காமராசர் பிறந்த நாள் சிறப்புப் பதிவு.
உரை - பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்.
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்💐💐
__________________
அவனி போற்றும் திறமையுடன் இங்கே சிவகாமியின் மகனாய் வந்துதித்தாய் !
குமாரசாமி என்னோற்றார் எனும்படி அவர் குமாரனாய் பார்புகழ வந்து பிறந்தாய்!
அரிதான சுதந்திரம் பெற பாடுபட்டு எரிகின்ற மெழுகு திரியாய் உனைத் தந்தாய்!
கல்வி நதியை ஆகாயத்தாமரைகள் அழிக்காமல் கொள்கைகள் பெருக்கி கரைபுரண்டோட வைத்தாய்!
வாழையடி வாழையாய் மனித குலம் தழைக்க-- ஏழைப்பங்காளன் நீ! இலவசக்கல்வி தந்தாய்!
'சமத்துவம்' கல்வி பெற இன்றியமையாததென
சமச்சீருடை திட்டம் வகுத்துத் தந்தாய்!
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈய தவிக்கும் வறியவர்க்கு மதிய உணவு அளித்தாய்!!
பதவி மட்டுமே தொண்டாற்றும் வழி யன்று என மதமுற வைக்கும் மணி மகுடத்தை வெறுத்தாய்!
'உழவே தலை' எனும் வள்ளுவன் கூற்றுணர்ந்து
உழவுத் தொழிலையும் உன்னதமாக் கினாய்!!
'நீரின்றி அமையாது உலகு' என உணர்ந்து
நீர் மலிய அணைகள் பல நிறுவித் தந்தாய்!
காவி அணியாத துறவியாய் உன்
உடல் பொருள்
ஆவி அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தாய்!
யாண்டும் கல்வியும் உழவும் சிறந்தோங்க மீண்டும் நீ வேண்டும்;. கர்ம வீரனே.... வாராயோ?
கவிஞர் .பழனிச்செல்வி , ஆசிரியை , ஈரோடு.
******************* ************** *********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments