12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இனிக்கும் இலக்கணம் - நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி 5 - இடப்பாகுபாடு - காட்சிப் பதிவு விளக்கம்.

 

                  வகுப்பு - 12 , தமிழ்

இயல்  - 2 - இனிக்கும் இலக்கணம்

நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி 5

                     இடப்பாகுபாடு




***************    ************   ************

                  வணக்கம் நண்பர்களே ! நாம் இயல் 2 ல் இனிக்கும் இலக்கணம் - நால்வகைப் பொருத்தங்கள் பகுதியல் நான்காவதாக உள்ள இடப்பாக்பாடு பற்றி இன்று காண உள்ளோம்.

       இடம் என்றால் என்ன ? அது எத்தனை வகைப்படும் ? என்ற இடப்பாகுபாடு பற்றி நம் பெரும்புலவர் அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவாகக் காண்போமா ?




இடப்பாகுபாடு

                           இடம் தன்மை, முன்னிலை ,படர்க்கை மூவகைப்படும். பெயர்ச்சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது. அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிடு பெயர்களிலும் வினை முற்றுகளிலுமே வெளிப்படும் பேசுபவன், முன்னிருந்து கேட்பவன், பேசப்படுபவன் அல்லது பேசப்படும் பொருள் ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படும்.


                   தமிழில்  தன்மையிலோ
முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு
உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை. சான்றாக, நான் புத்தகம் கொடுத்தேன் என்னும் தொடரில் பேசியவர் ஒருவர் என்று கூற முடியுமே ஒழிய ஆணா பெண்ணா என்று கூற முடியாது. முன்னிலையிலும் இவ்வாறே
பால்பாகுபாட்டை அறிய முடியாது.

                     தன்மைப் பன்மையில்
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை , 
உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என
இருவகை உண்டு .

                               பேசுபவர் ( தன்மை  ) 
முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்
கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப்
பன்மை ஆகும்.

நாம் முயற்சி செய்வோம்( உளப்பாட்டுத்
தன்மைப் பன்மை)

இத்தொடரில் நாம் என்பது தன்மை
முன்னிலையில் உள்ள அனைவரையும்
குறிக்கிறது. 

பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.

நாங்கள் முயற்சி செய்வோம்(உளப்படுத்தாதி
தன்மைப் பன்மை)

                     நாம் தமிழ்மொழியைப் பல்வேறு
நிலையில் பல்வேறு நோக்கில் 
பயன்படுத்துகிறோம். பழையனவற்றை
தவிர்ப்பதற்கும் புதியனவற்றை ஏற்பதற்கும்
நாம் தயங்கியதே இல்லை. கால ஓட்டத்தில்
இலக்கணங்களும் இலக்கணக் கூறுகளும்
தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

**************     **************    **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments