வகுப்பு - 12 , தமிழ்
இயல் - 2 - இனிக்கும் இலக்கணம்
நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி 4
எண் பாகுபாடு
************* ************ **********
வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் பால் பாகுபாடு பற்றி விரிவாகக் கண்டோம். இன்று எண் பாகுபாடு பற்றிக் காண்போம்.
முதலில் எண் பாகுபாடு பற்றி நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவைக் காண்போம்.
எண் பாகுபாடு.
இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
இரண்டு மனிதர்கள்
அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை.
பத்துத் தேங்காய்
இவற்றைப் பத்துத் தேங்காய்கள் என்று எழுதுவதில்லை.
இக்காலத் தமிழில் அஃறிணைப் பன்மைக்கெனத் தனி வினை முற்றுகள் இல்லை. ஆனால், ஒருமை பன்மை வேறுபா எழுவாயிலேயே வெளிப்படுகிறது.
ஒரு மரம் வீழ்ந்தது -
பத்து மரம் வீழ்ந்தது
தற்காலத் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் காணப்படுகிற ஒருமை - பன்மை பற்றிய குழப்பங்களுள் ஒன்று 'ஒவ்வொரு என்னும் சொல்லைப் பற்றியதாகும்.
ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.
போன்ற தொடர்களைப் பேசவும் எழுதவும் காண்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.
ஒவ்வொரு பள்ளியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
என்றே பேசவும் எழுதவும் வேண்டும்.
( ஒவ்வொரு - ஒருமை )
************* ************ ************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
rr6570103@gmail.com
ReplyDelete