12 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , மொழி
நம்மை அளப்போம்
பாடப்பகுதி - நெடுவினா
இளந்தமிழே ! - சிற்பி பாலசுப்பிரமணியம்.
***************** ************* ***********
3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுது.
தமிழின் சீரிளமைத் திறம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
முன்னுரை
கவி பாரதி தமிழின் தொன்மையை, “என்று பிறந்தவள் என்று அறியாத இயல்பினள் எங்கள் தமிழ்த்தாய்” என்றார். இத்தகைய தொன்மைச் சிறப்பும், பன்மைச் சிறப்பும் மிகுந்த தமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப் பல்வேறு இலக்கணச் சிறப்புக்களைப் பெற்றுள்ளது. எனவே ஒரு வரையறைக்குள் வரம்பு கடவாது படைப்பிலக்கியங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப சில புதிய வரவுகளும் உண்டு. எனவே சீரிளமைத்திறம் பெற்றுச் சிறப்புடன் விளங்குகிறது.
பொருளுரை: ஏற்ற துணை இல்லை
செம்பரிதி மலைமுகட்டில் தவழ்ந்து கீழிறங்கி மேலைக் கடலில் தலைசாய்க்கத் தொடங்குகிறான். அந்திவானம் செந்நிறக் காட்சியால் பூக்காடாகத் திகழ்கிறது. அந்தச் செவ்வானம் போல் சிவந்த கையுடன் உழைப்பாளர் மனம் நோக உழைத்துவிட்டு இல்லம் திரும்புகின்றனர்.
அவர்கள் உழைப்பால் சிந்திய வியர்வைத் துளிகள் தோள் மீது விம்மி முத்துக்களாய்க் காட்சி தருகின்றன. அவர்தம் உழைப்பின் பரிசாகக்கவிஞரால் தமிழ்த் துணையோடு வியந்துபாடத்தான் முடிந்தது. இதனை நீயே சொல்வாய் எனத் தமிழை விளிக்கிறார்.
முத்தமிழின் சுவை
கவிஞர் உள்ளத்தில் எழும் உணர்ச்சி எனும் வேருக்கு உணவாய் தமிழ் உள்ளதாகக் கூறுகிறார்.
முன்பு ஒருநாள் பாண்டிய மன்னர்தம் மனத்தில் இத்தகைய வெறி உணர்வு தோன்றியதால் உருவானதுதான் முத்தமிழ் வளர்க்கும் மூன்று சங்கம். தமிழ் தவழும் தமிழ்நாடே! நீ பாரி முதல் கடையெழு வள்ளல்களையும், புரவலர்களையும் இவ்வுலகிற்குக் கொடுத்தாய்.
மீண்டும் அந்தப் பழமைக்காலம் தமிழ்ப்படைப்பில், தமிழ்ப் பண்பாட்டில் நிலைக்க வேண்டும். அதைத் தமிழ்க்குயில் இன்னிசையோடு கூவவேண்டும்.
கூண்டினை உடைத்து எழும் சிங்கம் போலக் குளிர் பொதிகையில் தவழும் தென்தமிழே தமிழன் புதுமெருகுடன், தமிழ் புது வேகத்துடன் துள்ளித்திரிகிறது எனப் பாடத்தமிழே வா! வா! எனக் கவிஞர் அழைக்கிறார்.
முடிவுரை
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்றார் தமிழ்விடு தூது ஆசிரியர். இத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் அறிவியல் தகவல் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய வரவுகளைத் தமிழ் உலகுக்குத் தரவேண்டும், என்பதே கவிஞரின் அவா! அவர்தம் அவாவினை இளந்தமிழே! என்ற இனிய தலைப்பில் கவிதை வரிகளாய்க் கனிச் சாறாய்க் கொடுத்துள்ளார்.
மேலே கண்ட வினாவிற்கான பாடல் விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் காண்போமா ?
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments