12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - மொழியோடு விளையாடு - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.

 

வகுப்பு - 12 , தமிழ்

இயல் 1 - மொழி 

மொழியோடு விளையாடு.


**************     *************    *************

 மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

                 மொழி என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பே தனது எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரிந்தவன் மனிதன்! தனது திறன்களை மற்றவர்களும் அறிந்திட தீட்டினான் குகைகளில் ஓவியங்களாக! அவை எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் அழியாத காவியங்கள்!

அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.

தாயின் குரல்

குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்தாயின் குரலில் உயிரின் ஒலி

உயிரின் ஒலியில் உணர்வின் பிழம்பு

உணர்வின் பிழம்பே சிந்தனைச் சிதறல்

சிந்தனைச் சிதறலில் செயலின் தெளிவு

****************    **************   **********

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

எ.கா: கவிஞர் - ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்.

பதில்: கவிமணி

கேள்வி:

1. தமிழறிஞர், முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.

2. தாய்மொழி ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.

3. சிறுகதை ஆசிரியர் முதல்பாதி நவீனம்.

4. முன்னெழுத்து அரசன் பின்னெழுத்து தமிழ்மாதம்.

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப் பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

பதில்: 

1. மறைமலை அடிகள் 
2. தமிழ் ஒளி 
3. புதுமைப்பித்தன் 
4. கோதை

செய்துகற்போம்

தமிழறிஞர் எழுதிய கடிதங்களுள் ஏதேனும் இரண்டினைத் திரட்டி வகுப்பறையில்
வழங்குக.

மு.வ.வின் தம்பிக்கு, தங்கைக்கு ஆகிய இரண்டு கடிதங்களை வழங்கினால் கடிதப்
பயிற்சியும், தமிழ்க் கல்விப் பயிற்சியும் பெறலாம்.




மு.வ.வின் தங்கைக்குக் கடிதம்

(மு.வ. - மு. வரதராசனார்)





அன்புள்ள எழில்,
                  வாழ்த்துகள்! நீ எழுதிய கடிதங்கள் சொற்சுவை உடையனவாக இருந்தன.
அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் படித்தான் என்ற வியப்பு ஏற்படலாம். நீ எழுதிய கடிதம் நம் அன்னை மட்டும் அல்ல, அண்ணனும் படிக்க வேண்டிய கடிதம்தான்.

                    இவ்வுலகில் நல்லவர்களும், வல்லவர்களும் இருக்க வேண்டும். நற்பண்பு உடையோர் எத்தனையோ பேர் தம் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்கள் கூட சில நேரங்களில் சமுதாயத்தால் நசுக்கப்பட்டுச் சீரழிந்திருக்கிறார்கள்.

               பழங்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த நல்லவர்கள் அழிந்ததை வரலாறுகள்
காட்டுகின்றன. வல்லரசுகளான ஜெர்மனி, சப்பான் போன்ற நாடுகள் அழிந்ததைக்
கண்டிருக்கிறோம்.

                 நல்ல மருமகளாக வாழத் தொடங்கி குடும்பத்தாரின் இன்னல் பொறுக்க முடியாமல் மாண்ட செய்திகளையும் அறிவோம். மகனையும் மருமகளையும் ஆட்டிப் படைத்த மாமியார்
நன்மையும், உண்மையும் பெற்றிருக்க வேண்டும்.

              தமிழ் நல்லமொழி; சிறந்த மொழி. அதை வன்மையான மொழியாக மாற்றவில்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை ஓரளவே கண்டுள்ளோம்.

                        தமிழுக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கும் கொடுத்தோமா? நீதி மன்றங்களில் இருக்க வெறும் பேச்சு ஏன்?

                    தம்பி இன்றைய உலகம் வல்லமை படைத்த மாமியார் போல் உள்ளது. நம்முடைய தமிழகம் மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ , மனவேதனையோ எதிரே வந்து  எதிர்ப்படாதவாறு காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதா? என கருத்து ஏதாவது தெரிவிக்காமல் இருந்தால் அது குறித்து, எழுது. உணக்கு உடன்பாடு இல்லாத கருத்தை  விட்டு விடு.

                   நீ எந்த அளவுக்கு உண்மையாக உள்ளாயோ அந்த அளவுக்கு நானும் உண்மையாக .இருக்கிறேன். இந்தத் தமிழகத்தில் நாம் இருவராவது ஒன்றுபட முடியாதா? பார்ப்போம்.

                                                உன் அன்புள்ள,
                                                அண்ணன் மு.வ.

***********     ************    ***************

மு.வ.வின் - தம்பிக்குக் கடிதம்

(யான் கண்ட இலங்கைப் பயணம்)

                                                              சென்னை ,
                                                                  20.7.72.




அன்புள்ள தம்பிக்கு,

            வாழ்த்துகள்! வளம்பல பெறுக. நான் அண்மையில் இலங்கை சென்றிருந்தேன். என் இலங்கைப் பயண அனுபவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

                        தொடர்வண்டி மூலம் சென்னை
யிலிருந்து தனுஷ்கோடி வந்து சேர்ந்தேன். அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைத் தலைமன்னார் சென்றடைந்தேன். வழி எங்கும் நிலக்கடலில் கோலக் காட்சி; சிறுகப்பல், பெரிய கப்பல் திமிங்கிலமாய்க் கடலில் திரிந்தன.

                   தலைமன்னாரிலிருந்து கதிர்காமம் அடைந்தேன். கதிர்காமம் புத்தசமயம் பரப்பும்
துறவிகள் நிறைந்த புத்தர்கோயில் உள்ளது.
அதிலிருந்து பொலனருவா சென்றோம். அங்குக் கண்ணுக்கினிய காட்சிகள் பல
கண்டேன்.

                   பின்னர் இலங்கையின் தலைநகர் கொழும்புவை அடைந்தேன். கண்ணைக் கவரும் கட்டடங்கள் விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருந்தன.

                            அங்கிருந்து இலங்கையின் பழமைவாய்ந்த யாழ்ப்பாணம் நகரை அடைந்தேன். இலங்கையில் பல நண்பர்கள் இல்லம் சென்றேன். தேநீரும் பனங்கிழங்கும் கொடுத்து உபசரித்தனர்.

                          இப்படி இலங்கையின் பல சிறப்புவாய்ந்த பகுதிகளைக் கண்டுகளித்து
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வந்தேன். பின்னர் அங்கிருந்து தொடர்வண்டி மூலம்  எழும்பூர் வந்தடைந்தேன். எழும்பூரிலிருந்து இல்லம் சென்றடைந்தேன்.

                என் பயணம் இனிய பயணம். நீயும் வாய்ப்பு கிடைக்குமெனில் இலங்கையின் எழில் நகரங்களைக் கண்டு களிப்பாயாக.

                                                             இப்படிக்கு,
                                                  அன்புள்ள மு.வ.

**************     ***************   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments