11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - பாடப்பகுதி நெடுவினா - விரிவானம் - ஆறாம் திணை - வினா & விடை

 

              வகுப்பு - 11 , தமிழ்

     இயல் - 1 , நம்மை அளப்போம்

         நெடுவினா - ஆறாம் திணை 



**************     ************    *************


3 ) தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?


சங்க இலக்கியம் கூறிய புலம்பெயர் நிகழ்வு:

(i) தமிழர்கள் வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களினால் இடம் விட்டு இடம் செல்கின்றனர். இவ்வாறு புலம்பெயர்வது ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம் பெயர்ந்தபடியே இருக்கிறான்.

ii ) சங்க இலக்கியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும் பல பாடல்கள் தலைவன், தலைவி பிரிந்து போவதைச் சொல்லும் பொருள் தேடப் போவதால் புலம்பெயர நேரிடுகிறது.

(iii ) நற்றிணை 153ஆவது பாடலில் தனிமகளார், சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று. சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை,

வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி,

வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்பாழ்' என்கிறார்.

(iv) 2000 வருடங்களுக்கு முன்னர் அரசரின் கொலைச் சீற்றத்திற்குப் பயந்து வெளியேறியவர்கள் போலத்தான் சமீப காலங்களில் புகலிடம் தேடி அலைந்து கரை சேர்ந்தவர்களையும் சொல்லலாம்.

கனடாவில் புலம்பெயர் நிகழ்வுகள் :

i ) தமிழ் அகதிகள் கனடாவுக்குக் குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான். அவர்கள் குடியேறிய சில வருடங்களிலேயே பத்திரிகைகளும் ஆரம்பித்துவிட்டார்கள். நிரந்தர வேலை கிடையாது. அடுத்த வேளை உணவு பற்றி நிச்சயமில்லை. ஆனால் பத்திரிகைகளும் இலக்கிய சஞ்சிகைகளும் தொடங்கியுள்ளனர்.

(ii ) புது நாட்டில் புது வாழ்க்கையைப் பதிவு செய்கின்றனர். இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டது. தமிழர்கள் எட்டுக்கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

(ii) நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை பரந்துபோய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள்.

(iv) அதனால்தான் 'சூரியன் மறையாத தமிழ்ப் புலம்' என்று சொல்லும் அளவிற்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

அ. முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு :

சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்நூறு பாடல்கள் கொண்டது.

(ii) அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து இலட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதேசங்களுக்குத்தான்.

(iii) ஆறு மணிக் குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும். அதேபோல்தான் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களும், அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் ஆறாம் திணையான பனியும் பனி சார்ந்த நிலமும்தான்.

(iv) இவ்வாறு தமிழர் வாழ்வோடும் புலம் பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு இணைக்கப்படுகிறது.

***************    **************    ***********


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

2 Comments